கடந்த 2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார்,  இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் 'ஆடை '. இதில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜே ரம்யா உள்ளிட்ட பலர், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை வி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில்,  விஜி சுப்ரமணியன் தயாரித்துள்ளார்.  ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அமலாபால் கிழிந்த ஆடையுடன் தோன்றியிருந்தார். 

இதைத்தொடர்ந்து தற்போது, இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் அமலாபால்,  உடலில் துளியும் ஆடையின்றி இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.   

இந்த டீச்சரின் ஆரம்பத்திலேயே, அமலாபால் தாய் போலீசில் தன்னுடைய மகளை காணவில்லை என புகார் கொடுக்கிறார். மேலும் கடைசியாக தன் மகள் குடித்திருந்தார் என்பதையும் தெரிவிக்கிறார். பின் உயர்ந்த பில்டிங் மற்றும் போலீஸ் தீவிரமாக தேடும் காட்சிகள் காட்டப்படுகிறது. 

அரை மயக்கத்தில் அமலாபால் கண் விழிக்கும் காட்சிகள், ரத்தம் பரவியிருப்பதை பார்த்து இருவர் மிரண்டு போவது என விறுவிறுப்பு குறையாமல் உள்ளது ஆடை டீசர். 

இதைத்தொடர்ந்து அமலாபால் துளியும் உடலில் ஆடை இல்லாமல், பயந்து எழும் காட்சி, மற்றும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல், உடலை சுருக்கி கொண்டு மிரண்டு போய் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

இந்த டீசரை பார்க்கும்போது அமலா பால் மிகவும் போல்டான கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருக்கிறார் என்பதும், இந்த படம் பெண்களுக்கு இந்த சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சினை பற்றி  பேசும் படமாக இருக்கும் என்பதும் தெரிகிறது.