லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, 'கோலமாவு கோகிலா' படத்திற்கு பின் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஐரா' .

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரைலரில் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாராவின் யார் பேயாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது. மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள  நயன்தாரா, சமூக வலைத்தளங்கள் மூலம் இல்லாத பேயை இருக்கும் படி காட்டுவது, நன்றாக ஓடும் படத்தை நன்றாக இல்லை என கூறுவது... என ஜாலியான பெண்ணாக நடித்துள்ளார். இவருக்கு உதவியாளராக யோகி பாபு நடித்துள்ளார்.

வாழ்க்கையில் நடந்த கொடுமைக்காக, பழி வாங்குவதற்கு வருகிறார் பவானி. யாரையும் விட மாட்டேன் என்று  நடித்து கருப்பு நயன்தாரா சொல்வது போன்ற காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்களுக்கு இந்த அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என கூறலாம்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.

படத்தின் ட்ரைலர் இதோ: