தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு, இந்த படத்தை தமிழ், இந்தி, போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் இயக்குனர் பாலா ஏற்கனவே இயக்கிய 'வர்மா' திரைப்படம், எதிர்பார்த்தது போல் வரவில்லை என்பதால், முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்தும், மீண்டும் இந்த படத்தை புதிய இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

அதன்படி தற்போது 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் அறிமுக இயக்குனர் கிரீசாய என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

தற்போது இந்த படத்தின் புதிய டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதில் துருவ் பார்ப்பதற்கு, தந்தை விக்ரம் போலவே சில காட்சிகளில் இருக்கிறார்.  இந்த படத்தை E4 என்டர்டெயின்மென்ட் சார்பில், முகேஷ் மேக்தா என்பவர் தயாரித்துள்ளார்.

படத்தின் டீசர் இதோ: