பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ஓவியா நடிப்பில் வெளியாக உள்ள '90 எம்.எல்' திரைப்படம் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படத்தை அனிதாஉதீப் எனும் பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். 

ஓவியாவை தவிர மேலும் நான்கு பெண்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களுக்கு பஞ்சம் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் சிம்பு இசையில் உருவான 'மரண மட்ட'வீடியோ பாடலை வெளியிட்ட படக்குழுவினர், தற்போது இந்த படத்தின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நான்கு பெண்களில் ஒருவாறாக நடித்திருக்கும் நாயகி தன்னுடைய முதலிரவு கதையை கூறுவது இடம்பெற்றுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் டீசர் இதோ: