மக்களின் ஆதரவோடு ஜீ தமிழ் குடும்ப விருதுகளை பெற காத்திருக்கும் பிரபலங்கள்! காத்திருக்கும் கொண்டாட்டம்!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற மிகப்பெரிய விழாவின் மூலமாக பிரபலங்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டி வருகிறது. கடந்த வருடத்திற்கான விருது விழா நிகழ்ச்சி இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வருடத்திற்கான விருது விழா நிகழ்ச்சி தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் முதல் பாகம் வரும் ஞாயிறு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ரெட் கார்பெட் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முதல் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தீபாவளி தினத்தின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஆர்.ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்க கார்த்திக், விஷால், ஆர்யா, ஜெய், வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தாணு, பொன் ராம், அருண் விஜய், பார்த்திபன், ஜெயம் ரவி என எக்கச்சக்கமான திருவிழாவுக்கு பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஜீ தமிழ் பிரபலங்களின் திறமையை கொண்டாடும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் மனதை கவரும் என எதிர்பார்க்கலாம்.
ஃபேவரைட் விருதுகள் அனைத்தும் மக்களின் ஓட்டுகளின் முலமே தேர்வு செய்யப்பட்டது. ஆமாம், தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணம் செய்தும், மிஸ்டுகள் கால், ஆன் லைன் ( Zee 5 ) என பல்வேறு வழிமுறைகளில் பெறப்பட்ட பல லட்சக்கணக்கான ஓட்டுக்களின் மூலமாகவே வெற்றியாளரை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.