பெரியார் ராமரை இழிவுபடுத்தியதை பற்றி எதிர்த்து கேட்க சங்கியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என ரஜினிக்கு ஆதரவாக பிரபல செய்தி வாசிப்பாளர் கூறியுள்ளார்.  

பெரியார் பற்றிய ரஜினியின் பேச்சுக்கு 10 சதவிகிதம் எதிர்ப்பும் 80 சதவிகிதம் ஆதரவும் எழுந்துள்ளது அரசியல் தாண்டி பலரும் கருத்து தெரிவிப்பதை வைத்து அறிய முடிகிறது. 

அரசியல் சர்ச்சை பேச்சுகளுக்கு கட்சி சாந்த நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் மட்டுமே பதிலளித்து வந்தனர். ஆனால் ரஜினி பெரியார் பற்றி பேசியதற்கு தனிப்பட்ட நபர்கள் முதல், ஓடி ஒதுங்கும் சினிமாக்காரர்கள் கூட, ரஜினிக்கு ஆதரவாக ஓங்கி குரல் எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஷோபனா ரவியும் ரஜினிக்கு ஆதரவாக முழக்கமிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’இப்படியே தொடருங்கள் ரஜினி. நீங்கள் பேசியதைப்பற்றி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. ராமர், சீதை உருவத்துக்கு செருப்பு மாலை அணிவித்து அசிங்கப்படுத்தியதை அறிந்து மனது காயப்பட்டது. துக்ளக் இதழில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் எனக்கு நியாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு சிறு வயது. அப்போதே திகைத்து விட்டேன். அப்படி உணர சங்கியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நமது கடவுள் ராமரை பற்றி நாம் பேசவில்லை என்றால் வேறு யார் பேச தகுதி உள்ளது. இந்த விவகாரத்தில் அடங்கிப்போக வேண்டாம்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.