Beast: நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ரீலிசான படம் பீஸ்ட். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ரீலிசான படம் பீஸ்ட். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. எப்போதும் விஜய் படங்கள் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும், ஆனால், இந்தபடத்திற்கு நேற்றுக் கூட பல காட்சிகள் புக் ஆகவில்லையாம்.

என்ன நெல்சன் சார் இப்படி பண்ணிட்டீங்க?

மேலும், படம் பார்த்த அனைவரின் கருத்தும், என்ன நெல்சன், ஏன் இப்படி என்பது தான், நெல்சனிடம் எல்லாரும் எதிர்ப்பார்த்தது ஒரு நல்ல டார்க் காமெடி படத்தில் விஜய் எப்படி வருவார் என்பது தான். ஆனால், இது டார்க் காமெடி படமா அல்லது விஜய் படமா என்று யாருக்குமே தெரியவில்லையாம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய்காந்த் படம் பார்ப்பது போல் உள்ளதாம். 

இருப்பினும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், கட்டவுட் வைத்தும் கொண்டாடி, தனது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 

விஜய் பீஸ்ட்டை கலாய்த்த விஜய் டிவி:

முன்னதாக வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலரில், விஜய், திரையை கிழித்து, என்ட்ரி கொடுப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அதன்பின், மற்றொரு காட்சியில் துப்பாக்கி வைத்துக் கொண்டு விஜய் தீவிரவாதிகளை சுடுவதுபோல் அமைத்திருக்கும்.

இந்நிலையில், இந்த காட்சிகளை கலாய்க்கும் விதமாக அதனை ஸ்பூஃப் செய்து காமெடியாக வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், காமெடி பிரபலம் ராமர் திரையை கிழித்து, என்ட்ரி கொடுக்கிறார்.

Scroll to load tweet…

பிறகு, என்ன பயமா இருக்கா? இனிமே தான் பயங்கரமா இருக்கும் என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த காமெடியை பார்த்து, நிஷா உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க ...Simbu and Anirud: தமிழால் இணைவோம் ட்விட் போட்ட சிம்பு மற்றும் அனிருத்...ஏ. ஆர். ரகுமான் பதிவுக்கு நேரடி ஆதரவா?