‘பொன்னி’ சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தங்கமகள்’ சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய் டிவியின் ‘தங்கமகள்’ சீரியல்

ஜனவரி 22, 2024 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ‘தங்கமகள்’. இதில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி, அஸ்வினி ஆனந்தா, ஜீவிதா கிருஷ்ணன், அஜய் ரத்னம், காயத்ரி ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 200 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பான நிலையில், தற்போது இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தங்கமகள்’ சீரியலின் கதை

நகரத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் ஹாசினி, காரை எடுத்துக் கொண்டு வேகமாக பயணிக்கிறார். அப்போது ராமசாமி என்பவர் மீது மோத அதன் விளைவாக அவர் சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைகிறார். இதன் காரணமாக ராமசாமியின் குடும்பமே வறுமையில் வாடுகிறது. இதை தெரிந்து கொள்ளும் ஹாசினி ராமசாமியின் வீட்டில் அவர்களுக்கு உதவும் பொருட்டு பணி பெண்ணாக வேலை பார்க்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களிடம் நடந்த உண்மைகளை கூறி மன்னிப்பு கேட்கும் பொருட்டு அவர் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்கிறார். ராமசாமியின் இரண்டாவது மனைவியின் தம்பியான முத்துப்பாண்டியுடன் ஹாசினிக்கு காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஹாசினியை முத்துப்பாண்டி திருமணம் செய்து கொள்கிறார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கிய 'தங்க மகள்'

பின்னர் ராமசாமியை கார் ஏற்றி கொலை செய்தது ஹாசினி தான் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது. தங்கள் தந்தையே கொன்றவரை மன்னிக்க மாட்டோம் என்று ராமசாமியின் மகள்கள் உறுதியாக இருக்கின்றனர். இவ்வாறு உடைந்த பிணைப்புகளை சரி செய்து, அவளை அறியாமல் காயப்படுத்திய ஆன்மாக்களுடன் சமரசம் செய்வதற்கான தேடலில், ஹாசினியின் இடைவிடாத பாவமன்னிப்புத் தேடலைச் சுற்றி கதை விரிவடைகிறது. ஹாசினி மன்னிக்கப்பட்டாளா? அவளை முத்துப்பாண்டியும் ராமசாமியின் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டார்களா? என்பது குறித்து கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சீரியல்கள்

இந்த நிலையில் இந்தத் தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் இறுதி கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்டு 200 எபிசோடுகளை மட்டுமே கடந்துள்ள நிலையில் சீரியல் முடிவடைய இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ‘பொன்னி’ சீரியல் முடிவடைந்த நிலையில், அடுத்த அடுத்த சீரியல்களை முடித்து புதிய சீரியல்களை ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.