விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்னி’ சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
விஜய் டிவி சீரியல்கள்
விஜய் தொலைக்காட்சியில் காலை முதல் இரவு வரை பல்வேறு நாடகங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. விஜய் டிவியின் சீரியல்கள் மற்ற தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் உடன் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
இறுதி கட்டத்தை நெருங்கிய ‘பொன்னி’ சீரியல்
கடந்த 2023 மார்ச் 27 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்னி’ சீரியல் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில், தற்போது இந்த தொடர் முடிவுக்கு வந்துள்ளது. சில நாட்களாகவே தொடர் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
‘பொன்னி’ சீரியலின் கதை
‘பொன்னி’ சீரியலில் வைஷ்ணவி சுந்தர், சபரிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நாடகத்தை மனோஜ் குமார் இயக்குகிறார். இந்த சீரியலின் கதை பொன்னி மற்றும் அவளுடைய தந்தையைப் பற்றியது. கடுமையாக நோய்வாய் பட்டிருக்கும் தந்தையை தனி ஆளாக கவனித்து வரும் பொன்னி, அப்பா கடன் பட்ட நபரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு கதாநாயகனுடன் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்தின் மூலம் அவர் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். ஆனால் அவற்றையெல்லாம் சமாளித்து அவர் எப்படி தனது குடும்பத்துடன் இணைகிறார் என்பது பொன்னி சீரியலின் மையக்கரு.
கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
565 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு நிறைடைந்துள்ளது. சீரியல் நடித்த நடிகர்கள் அனைவரும் கடைசி நாளில், கேக் வெட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. ஜூன் 7 சனிக்கிழமை உடன் ‘பொன்னி’ சீரியல் நிறைவு பெறுகிறது.
