விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும்,  ரசிகர்களால் அதிக அளவு ரசிக்கப்பட்டு வருகிறது. அதே போல் சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சில சீரியல்களை குடும்ப தலைவிகள் மட்டும் இன்றி, இளைஞர்களும் விரும்பி பார்க்கின்றனர். 

மேலும் சீரியல் மூலம் ஒன்றுசேரும் சில நடிகர்கள் உண்மையில் வாழ்க்கையிலும் இணைவது உண்டு. 

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' சீரியல் மூலம் இணைந்த ஜோடிகள் அசிம் மற்றும் ஷிவானி. இந்த தொடர் இன்னும் நிறைவடையாத நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' என்கிற சீரியலிலும் இதே ஜோடிகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  மேலும் இருவரும் இணைந்து டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென ஷிவானி 'கடைக்குட்டி சிங்கம்' சீரியலில்  இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் தற்போது வரை இதற்கான காரணம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இந்த சீரியலை விட்டு வெளியேறிய காரணத்தை தெரிவிப்பாரா? மாட்டாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.