Asianet News TamilAsianet News Tamil

Bigg Boss Tamil: லட்டு உள்ள பிக்பாஸ் வச்ச கிஃப்ட்! விசித்ராவுக்கு வாரி வழங்கியதால் ஏமார்ந்து போன ஹவுஸ் மேட்ஸ்!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு லட்டுகள் அனுப்பி தங்களின் பாசத்தையும், வெறுப்பையும் பிக்பாஸ் வெளிக்காட்ட சொன்ன நிலையில், லட்டுடில் இருந்த விஷயம் தெரியாமல் பலர் விசித்ராவுக்கு வழங்கிய நிலையில், தற்போது அவருக்கு மேலும் ஒரு ஸ்டார் கிடைத்ததால் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

vichitra won the gold star in laddu task mma
Author
First Published Nov 14, 2023, 4:52 PM IST | Last Updated Nov 14, 2023, 4:52 PM IST

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  இன்றிய முதல் புரோமோவிலேயே, வெறித்தனமான டாஸ்க் ஒன்றை வைத்து, அதில் தோல்வியடைந்ததால் போட்டியாளர்களை வெளியே அனுப்பி பிக்பாஸ் வீட்டின் பெட் ரூம் கதவுகளை மூடினார் பிக்பாஸ். எனவே பலர் எங்கே இருப்பது என, தெரியாமல் பெட்டியுடன் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

இதை தொடர்ந்து லட்டுக்களை வைத்தே, யாரும் எதிர்பாராத டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ். பிக்பாஸ்ஸிடம் இருந்து இரண்டு லட்டு பிளேட் வருகிறது. இதில் ஒரு லட்டை எடுத்து நண்பராக கருதுவோருக்கு வழங்க வேண்டும் என்றும், மற்றொரு லட்டுவை எடுத்து பிடிக்காதவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து அர்ச்சனா லட்டை எடுத்து விசித்ராவுக்கு கொடுத்து, எனது வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு நண்பனாக அவரை கருதுகிறேன், எனக்காக அவர்கள் நின்றார்கள் என்று கூறினார். இதனை அடுத்து பூர்ணிமா அர்ச்சனாவுக்கு லட்டு கொடுக்கிறார். உங்களுடன் நான் நல்ல முறையில் நட்பை எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

vichitra won the gold star in laddu task mma

அதன்பின்னர் இந்த லட்டை எதிரிக்கும் கொடுக்கலாம் என்று பிக் பாஸ் தெரிவிக்கிறார். இதனை அடுத்து மாயா விஷ்ணுவுக்கும், மணிசந்திரா தினேஷ்க்கும், பூர்ணிமாவுக்கு அர்ச்சனாவும் கொடுக்கின்றனர்.

Sakshi Agarwal: மம்மூட்டி குடும்பத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்..! தீபாவளி அன்று வெளியான சரவெடி அறிவிப்பு!

அதேபோல் எனது எதிரியாக நான் ஜோவிகாவை நினைத்து அவருக்கு கொடுக்கிறேன் என விசித்ரா லட்டு கொடுக்க, பதிலுக்கு ஜோவிகாவும் விசித்ராவுக்கு லட்டு கொடுத்தார். பூர்ணிமாவும் விசித்ராவுக்கு லட்டு கொடுத்து அதற்கான காரணத்தை கூறும்போது ’விசித்ராவின் பக்கத்தில் போய் பார்த்தால் அவரிடம் உண்மை இருக்காது என்று கூறினார்.

vichitra won the gold star in laddu task mma

Anouhska Ajith: அம்மாவை மிஞ்சிய அழகில் அஜித் மகள் அனோஷ்கா! சித்தியுடன் தீபாவளி கொண்டாடிய கலர் ஃபுல் போட்டோஸ்!

அதேபோல் ஜோவிகா ’சில இடங்களில் விசித்ரா காட்டும் பாசம் போலியானதாக தெரிகிறது என்று கூறினார். இதனை அடுத்து விசித்ராவிடம் அதிக லட்டுகள் இருக்கும் நிலையில் திடீரென ஒரு ட்விஸ்ட்டை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதாவது போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் ஒரு லட்டுவில் கோல்டன் ஸ்டார் மறைந்திருக்கிறது என்று கூறுகிறார். இதை தொடர்ந்து அனைவருமே லட்டுவை தீவிரமா சோதனை செய்கிறார்கள். கடைசியில், விசித்ராவுக்கு வழங்கிய லட்டில்  டான் அந்த ஸ்டார் இருக்கிறது. இதை பார்த்து செம்ம காண்டாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios