வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள்,  ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தற்போது இவர்களையும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக பலர் பார்க்கின்றனர். இதனால் வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்பு கிடைத்த பல கதாநாயகிகள் சின்னத்திரை சீரியல் நாயகிகளாக மாறி விடுகிறார்கள்.

இந்நிலையில் 'ராஜா ராணி' , 'தங்கம்' ,கல்யாணம் முதல் காதல் வரை' , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி. நடிப்பை தவிர்த்து, நாய்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கடந்த வருடம் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்தை தொடர்ந்தும் சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் கணவருக்கு ஸ்ரீதேவி மூக்கு குத்தி கொள்ளவேண்டும் என்பது ஆசையாம். அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீதேவி மூக்கு குத்தி கொண்டுள்ளார். அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 

 

பொதுவாக நடிகைகள், மூக்கு குத்தினால் நன்றாக இருக்காது... வலிக்கும்... மாடர்ன் உடைகள் அணியும் போது செட் ஆகாது என பல்வேறு காரணங்களை கூறி மூக்கு குத்துவதை தவிர்க்கும் நிலையில், இவர் மூக்கு குத்தி கொண்டு, கணவரின் ஆசையை நிறைவேற்றியதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.