சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட ஜோடிகள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

கிராமத்து மனம் கமழும் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தனர்.  தற்போது பல படங்களில் பின்னணிப் பாடகர்களாக உள்ளனர்.  மேலும் வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டு அசத்தி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கையே மாறிவிட்டது.  இந்நிலையில் அன்மையில் செந்தில் கணேஷ் அவருடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.  இதற்கு தன்னுடைய கணவருக்கு மறக்க முடியாத பரிசை கொடுக்க வேண்டும் என எண்ணிய ராஜலட்சுமி,  நீண்ட நாட்களாக செந்தில் கணேஷ் வாங்க ஆசைப்பட்ட ஆர்மோனியப்பெட்டியை பரிசாக கொடுத்துள்ளார்.

அதில் இசைஞானி இளையராஜாவின் கையொப்பத்தையும் வாங்கி பரிசளித்துள்ளார்.  இது செந்தில் கணேஷ் வாழ்க்கையில் மறக்க முடியாத சிறந்த பரிசாக அமைந்தது என்று ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.