Kamal: விக்ரம் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், ரஞ்சித் இயக்கத்தில், கமல் நடிக்கும் படம் விரைவில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரஞ்சித் இயக்கத்தில், கமல் நடிக்கும் படம் விரைவில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரசியல், சினிமா பயணம்:

கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிகர் என்பதை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருபவர் . 

இவர் கடந்த சில வருடங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், படங்களில் நடிப்பதையும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையும் தொடர்ந்து வருகிறார்.

விக்ரம் திரைப்படம்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருவதால், அதன் பின்னணி பணிகள் முழுவீச்சில் துவங்கி, நடைபெற்று வருகிறது.கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இருப்பினும், கமலின் அடுத்த படத்தினை பற்றிய தகவல் வெளியாகி அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. 

 கமல் கையில் உள்ள அடுத்தடுத்த படங்கள்:

 கமல் தற்போது, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, இயக்குனர் முத்தையாவின் விருமாண்டி 2, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் உடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல், ரஞ்சித் கூட்டணி விரைவில்:

சார்பட்டா பரம்பரை பார்த்து வியந்த கமல், ரஞ்சித்தை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போதில் இருந்து இருவரும் இணைந்து படம் பண்ணவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, புதிய படத்தில் இருவரும் கைகோர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் நடிகர் கமல், ரஞ்சித் கூறிய ஒன்லைன் கதையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும், முழு ஸ்கிரிப்டையும் தயாரிக்கும்படி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ''நட்சத்திரம் நகர்கிறது'' பணிகளை ரஞ்சித் முடித்துள்ள நிலையில், கமல் - ரஞ்சித் கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க ....Pooja Hegde Dance: பீஸ்ட் பட நடிகையுடன் சேர்ந்து அனிருத் மேடையில் போட்ட குத்தாட்டம்...செம்ம வைரல் வீடியோ..!