Actress Alya Manasa : வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக தற்பொழுது சின்னத்திரை நாயகிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகை ஆல்யா மானசாவிற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

நடிகை ஆலியா மானசா சின்னத்திரை நாயகியாக தற்பொழுது பல சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக 2017ம் ஆண்டு ஒளிபரப்பான "செம்பா" என்ற நாடகம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ரோஜா" என்ற நாடகம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

நடிகை ஆலியா மானசா "ஜூலியும் நான்கு பேரும்" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று சின்னத்திரை சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக திரிந்து வரும் ஆலியா மானசா, சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

2 ரூபா சம்பளம் முதல் கருப்பா இருப்பதால் கழட்டிவிட்ட காதலிக்கு சவால்விட்டது வரை ரஜினி பற்றிய டாப் 10 சீக்ரெட்ஸ்

View post on Instagram

தற்பொழுது மிகவும் சந்தோஷமாக வாழ்த்து வரும் இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தனது எடை குறைப்பு பற்றிய பேசியிருந்த ஆலியா, 50 நாட்களில் தான் 16 கிலோ எடை குறைத்துள்ளதாக கூறியுள்ளார். 28 வயதே நிரம்பிய ஆலியா மானசா, பல முன்னணி நடிகைகளுக்கு இணையாக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பலருக்கு இன்ஸ்பிரஷனாக இருக்கின்றது என்கிறார்கள் ரசிகர்கள்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா, தனது குடும்பத்தினருடன் எடுக்கும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து தனது ரசிகர்களை அவ்வப்போது மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவர். அண்மையில் அவர் தனது 28வது பிறந்தநாளை, தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு கொண்டாடிய வீடியோ வைரலானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.