குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி உள்ளது. 

Cook With Comali Season 6

சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாமல் பல பேமிலி ஆடியன்ஸை கவரும் சீரியல்களை ஒளிபரப்பி, மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை விஜய் டிவி வைத்துள்ளது. இந்த நிலையில் விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி விளங்கி வருகிறது. 5 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. குக் வித் கோமாளி கடந்த சில ஆண்டுகளாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சீசன் 6 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

CWC 6 போட்டியாளர்கள் பட்டியல்

இந்த சீசனில் போட்டியாளர்களாக பிரியா ராமன், கஞ்சா கருப்பு, ஷபானா ஷாஜகான், சௌந்தர்யா, ஜாங்கிரி மதுமிதா, உமைர், ராஜூ ஜெயமோகன், சுந்தரி அக்கா, ஐடி விவசாயி நந்தகுமார் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கெடுத்திருந்தனர். பழைய கோமாளிகளான புகழ், குரேஷி, ராமர், சுனிதா ஆகியோருடன் புதிய கோமாளிகளாக சௌந்தர்யா நஞ்சுண்டன், டாலி, சர்ஜின் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, கௌஷிக் ஆகியோர் இருந்து வருகின்றனர். வழக்கம்போல சீசன் 6 ஐ ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார். முன்பு எப்போதும் போல் இல்லாத வகையில் இந்த முறை ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வாரங்கள் நடக்கும் போட்டியில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து மூன்றாவது வாரம் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களை வெளியேற்றும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Cooku with Comali 6 | 9th & 10th August 2025 - Promo 1

பேன்ட்ரியை இழுத்து மூடிய நடுவர்கள்

அந்த வரிசையில் முதலில் சௌந்தர்யா எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டாவதாக கஞ்சா கருப்பு, மூன்றாவதாக சுந்தரி அக்காவும் வெளியேற்றப்பட்டனர். தற்போது இவர்கள் தவிர ஏழு பேர் போட்டியிட்டு வருகின்றனர். இந்த வாரம் அடுத்த எலிமினேஷனுக்கான நாள் நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் பேன்ட்ரியை மூடியுள்ளனர். பேன்ட்ரி என்பது சமையலுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையாகும். அதை நடுவர்கள் மூடி இருக்கின்றனர். மேலும் சீக்ரெட் பாக்ஸ் என்கிற ஒரு பெட்டியையும் வைத்துள்ளனர். அந்த பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து தான் இந்த வாரம் சமைக்க வேண்டும் என்று தொகுப்பாளர் ரக்சன் கூற அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

அட்வான்டேஜ் டாஸ்க்கில் மாட்டிய கோமாளிகள்

இரண்டாவதாக வெளியான ப்ரோமோவில் அட்வான்டேஜ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் கோமாளிகள் பிரியாணியை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அந்த பிரியாணியை சாப்பிட முடியாமல் கோமாளிகள் தலை தெறித்து ஓடுகின்றனர். இப்படியாக இரண்டு ப்ரோமோக்களும் வெளியாகி உள்ளது. வழக்கம் போல இந்த வாரமும் காமெடி மற்றும் கலாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த வாரம் யார் வெளியேறப் இருக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.