பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 23 தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் இரண்டாவது சீசன் ரசிகர்கள் மனதில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மூன்றாவது சீசனுக்கான எதிர்பார்ப்பு சற்றும் குறையவில்லை.

இந்த நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது அடிக்கடி வெளியாகி வருகிறது. மேலும் சில பிரபலங்கள் தங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்களையும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் "பெண்கள் இருவர், பஸ்சில் அமர்ந்து வீடியோ ஒன்றை பார்க்கின்றனர். அதில் ஒரு பெண்ணின் உருவம், பேய் மாதிரி தெரிகிறது". 

இதில் காட்டுறது அவர்களுடைய முகம் மட்டும் அல்ல, நம்முடைய உண்மையான முகமும் தான் என கமல், பிக்பாஸ் மூன்றாவது சீஸனின் வசனத்தை பேசுகிறார்.