விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'அரண்மனை கிளி' சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பல வருடங்களுக்கு பின் இந்த சீரியல் மூலம் மீண்டும் தமிழில் நடிகை பிரகதி முக்கிய கதாப்பாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 

இவர் பல தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், கதாநாயகியாக நடித்த பிரகதி, இந்த சீரியலில் ஆளுமை மிகுந்த பெண்ணாகவும், மிகவும் பாசமான அம்மாவாகவும் நடித்துள்ளார்.

'அரண்மனை கிளி' சீரியலில் ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் மோனிஷாவின் அப்பாவி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அறிமுகம் என்னவோ... தமிழில் ஒளிபரப்பான குலதெய்வம் சீரியல் தான்.

தன்னுடைய அக்காவுடன், விளையாட்டு தனமாக ஆடிஷனில் கலந்து கொண்ட இவர், அந்த சீரியலில் நடிக்க தேர்வானார். 

தற்போது விஜய் டிவி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அரண்மனை கிளி'  சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாற்றியுள்ளது. 

பார்க்க சிறிய பெண் போல் இருக்கும் இவருக்கு, திருமணம் ஆகிவிட்டதாக தற்போது அவரே கூறியுள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில், கணவர் கேரளாவில் தொழிலதிபராக இருப்பதாகவும், தன்னுடைய நடிப்பிற்கு மாமனார், மாமியார், கணவர் என அனைவரும் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் முறையான இவர் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜானுவுக்குள் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை லேட்டாக தெரிவித்தாலும் லேட்டஸ்ட்டாக தெரிவித்து வருகிறார்கள்.