விரைவில் இந்தியா வரும் யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ரேன்ஜ் இவ்வளவா?

புதிய எலெக்ட்ரிக்  ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டில் இருந்தே வாங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

Yamaha designing a NEOs based electric scooter specifically for India

யமஹா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்காக புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது யமஹா நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த யமஹா NEO’s மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் யமஹா நிறுவனம் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது  

இந்திய வெப்ப நிலையை கருத்தில் கொண்டு யமஹா நிறுவனம் புது வாகனத்தை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சந்தைக்காக உருவாக்கப்படும் புதிய எலெக்ட்ரிக்  ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டில் இருந்தே வாங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

யமஹா NEO’s:

முன்னதாக யமஹா NEO’s எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பா சந்தையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. புதிய NEO’s மாடலில் 2.5 கிலோ வாட் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 50.4 வோல்ட், 19.2 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 68 கிலோ மீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. 

Yamaha designing a NEOs based electric scooter specifically for India

யமஹா நிறுவனம் தனது NEO’s மற்றும் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை டீலர்களுடன் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து இருந்தது. இதை ஒட்டி நடத்தப்பட்ட ஆய்வில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைந்த பட்சம் 25 முதல் 35 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து யமஹா நிறுவனத்தின் NEO’s மாடல் ஒற்றை பேட்டரி கொண்ட வேரியண்ட் 37 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

100 கிலோமீட்டர்கள் ரேன்ஜ்:

இந்திய சந்தையில் ஸ்கூட்டரை விற்பனை செய்ய யமஹா, நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேன்ஜ்-ஐ மேலும் அதிகப்படுத்த வேண்டும். இந்திய வாடிக்கையாளர்கள் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் யமஹா நிறுவனம் தனது ஸ்கூட்டர் இத்தகைய ரேன்ஜ் வழங்குவதற்கான பணிகளில்  மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் மற்றும் அதை விட அதிக கிலோ மீட்டர்கள் ரேன்ஜ் வழங்குகின்றன. இத்தகைய திறனுடன் யமஹா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில், சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள முடியும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios