எலான் மஸ்க் வைத்த கண்கூச வைக்கும் X விளக்கு... கடுப்பாகி ஆப்பு வைத்த அமெரிக்க மக்கள்!

24 புகார்கள் வந்ததன் எதிரொலியாக எக்ஸ நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையக கட்டிடத்தின் உச்சியில் இருந்த பிரகாசமான விளக்கு இப்போது நீக்கப்பட்டுள்ளது.

X Sign Removed From Twitter Headquarters After Neighbours Complain

முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் பெயர் மாற்றத்துக்குப் பின் பிரகாசமாக ஒளிரும் 'எக்ஸ்' அடையாளம் நிறுவப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே அது அகற்றப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் புகார் அளித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறவில்லை என அத்துமீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டதால் எக்ஸ் வடிவில் ஒளிர்ந்த விளக்கு அகற்றப்பட்டிருக்கிறது. எக்ஸின் பிரம்மாண்ட விளக்கு குறித்து 24 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக எக்ஸ நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையக கட்டிடத்தின் உச்சியில் இருந்த பிரகாசமான விளக்கு இப்போது நீக்கப்பட்டுள்ளது.

செம்ம லுக்... மிகக் குறைந்த விலை... அசத்தும் ஜியோ புக் லேப்டாப்! புத்தம் புதிய ஜியோ ஓஎஸ்!

2022ஆம் ஆண்டு அக்டோபரில் $44 பில்லியனுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதற்கு அண்மையில் எக்ஸ் (X) என்று பெயர் மாற்றம் செய்தார். அதன்பின் பிரம்மாண்ட எக்ஸ் அடையாளம் தலைமையகத்தின் உச்சியில் ஒளிரத் தொடங்கியது. அதைப்பற்றி பதிவிட்ட எலான் மக்ஸ், "அழகான சான் பிரான்சிஸ்கோ, மற்றவர்கள் உங்களை கைவிட்டாலும், நாங்கள் எப்போதும் உங்கள் நண்பராக இருப்போம்" என்று குறிப்பிட்டார்.

இரவு நேரங்களில் எக்ஸ் விளக்கின் ஒளி உள்ளூர்வாசிகளை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. மிகவும் பிரகாசமாக கண்கூச வைக்கும் ஒளி நீண்ட தூரம் வரை தெரியக்கூடிய வகையில் உள்ளது என்று அப்பகுதி மக்கள் பலர் புகார் கூறினர். அணைந்து அணைந்து எரியும் பிரம்மாண்ட விளக்கு தொலைவில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரம் போல தெரிவதாகவும் நெட்டிசன்கள் வீடியோவைப் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், எக்ஸ் நிறுவனம் தாங்களே முன்வந்து எக்ஸ் நிறுவனத்தை அகற்றியிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இது தற்காலிகமானது என்றும் மீண்டும் எக்ஸ் அடையாளம் அதே இடத்தில் பொருத்தப்பட இருப்பதாகவும் சொல்லபடுகிறது.

நிலவை நெருங்கும் சந்திரயான் 3.. முடிவுக்கு வரும் புவி வட்டப்பாதை.. இனி நிலவின் வட்டப்பாதைக்குள் பயணம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios