16 இன்ச் டிஸ்ப்ளேவுடன் உலகிலேயே குறைந்த எடை Acer லேப்டாப் அறிமுகம்!
ஏசர் நிறுவனம் ‘ஏசர் ஸ்விஃப்ட் எட்ஜ்’ (Acer Swift Edge) என்ற பெயரில் 4K 16-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் கூடிய எடை குறைவான லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
லேப்டாப் தயாரிப்பில் நற்பெயர் பெற்ற நிறுவனம் ஏசர் ஆகும். இந்த ஏசர் நிறுவனம் உற்பத்தித்திறனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக மெல்லிய, எடை குறைந்த லேப்டாப்பை வடிவமைத்துள்ளது. இந்த லேப்டாப்பில் ஆன்லைன் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக செயல்படும்" மைக்ரோசாப்ட் புளூட்டன் பாதுகாப்பு செயலியையும் கொண்டுள்ளது.
இது உலகின் மிக இலகுவான 16-இன்ச் OLED மடிக்கணினி என்றும், 1.17 கிலோ எடை கொண்டதும் என்றும் ஏசர் தெரிவித்துள்ளது. லேப்டாப்பின் பகுதிகள் அலாய் பொருட்களால் ஆனது. இது 20 சதவீதம் இலகுவானது மற்றும் வழக்கமான அலுமினியத்தைப் போல 2 மடங்கு வலிமையானது. ஏசர் ஸ்விஃப்ட் எட்ஜ் லேப்டாப்பில் AMD ரைசன் ப்ரோ பிராசசர் உள்ளது.
இந்தியாவில் ஏசர் ஸ்விஃப்ட் எட்ஜ் விலை: Acer Swift Edge Price
ஏசர் இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் தளத்திலும், அமேசான் தளத்திலும் Acer Swift Edge விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.124,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Acer Swift Edge லேப்டாப்பானது ஆலிவின் பிளாக் நிறத்தில் வருகிறது, அத்துடன் 65W PD சார்ஜர் மற்றும் டைப்-சி பவர் கார்டு ஆகியவை வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்! வந்துவிட்டது AI chatbot, ChatGPT!
Acer Swift Edge சிறப்பம்சங்கள்:
ஏசர் ஸ்விஃப்ட் எட்ஜ் 16-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 4K அளவிலான வீடியோ, பிக்சர் குவாலிட்டி வழங்குகிறது. அதாவது 3840 x 2400 பிக்சல்கள் உள்ளது. இந்த லேப்டாப்பில் AMD Ryzen 7 6800U ஆக்டா கோர் பிராசசர், 16GB LPDDR5 ரேம், 1TB PVMe மெமரி உள்ளது. லேப்டாப் பெரியதாக இருந்தாலும் விசைப்பலகையில் நம்பர் பேட் என்று தனியாக வழங்கப்படவில்லை. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக கைரேகை ரீடர் உள்ளது.
ஏசர் ஸ்விஃப்ட் எட்ஜ் லேப்டாப்பில் 60fps வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்ட முழு-எச்டி வெப்கேம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளின் போது தெளிவான குரலை பதிவு செய்வதற்காக "டெம்போரல் சத்தம் குறைப்பு" என்ற வசதி உள்ளது. இரண்டு USB Type-C போர்ட்கள், USB 3.2 Gen 1 போர்ட் மற்றும் HDMI போர்ட் ஆகியவை உள்ளன. Wi-Fi 6E வயர்லெஸ் வசதி உள்ளது.
ஏசர் ஸ்விஃப்ட் எட்ஜ் லேப்டாப்பை சார்ஜ் செய்வதற்காக 65W PD அடாப்டரும், 54Wh சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 2021, விண்டோஸ் 11 ஹோம், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், புளூடூத் 5.2 உள்ளன. ஒரு வருட சர்வதேச உத்தரவாதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.