Asianet News TamilAsianet News Tamil

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்! வந்துவிட்டது AI chatbot, ChatGPT!

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக இயந்திர கற்றல் மற்றும் நுண்ணறிவு மூலம் செயல்படும் சாட்போட் மேம்படுத்தப்பட்டுள்ளது. Chatbot, ChatGPT என்றால் என்ன? இதனால் என்ன பலன் என்பது குறித்து இங்குக் காணலாம்.

What is Elon Musk AI chatbot phenomenon ChatGPT Check the New Technology in Tamil
Author
First Published Dec 15, 2022, 12:30 PM IST

AI போட் ChatGPT என்றால் என்ன?

ChatGPT என்பது ஒரு முன்மாதிரி உரையாடல் அடிப்படையிலான AI சாட்போட் ஆகும், இது இயற்கையான மனித மொழியைப் புரிந்துகொள்வதற்கும், மனிதனைப் போலவே எழுதப்பட்ட மெசேஜ்களை உருவாக்குவதற்கும் திறன் கொண்டது.

GPT என்பதன் விரிவாக்கம் ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்ன்டு டிரான்ஸ்ஃபார்மர் - டெக்ஸ்ட் ஆகும். இது AI தொழில்நுட்பத்தின் தற்போதுள்ள மேம்பட்ட பரிணாமம் என்று சொல்லப்படுகிறது.

இந்த புதிய செயற்கை நுண்ணறிவை உருவாக்கியது யார்?

தற்போது டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றி உள்ள எலான் மஸ்க் நிறுவிய தனிப்பட்ட ஆராய்ச்சி அமைப்பு தான் OpenAI ஆகும். அந்த அறக்கட்டளையின் சமீபத்திய சாட்போட் தான் புதிய AI.

கடந்த 2015 ஆண்டின் பிற்பகுதியில் பிரபல தொழில்நுட்ப முதலீட்டாளர் சாம் ஆல்ட்மேன் உட்பட பிற சிலிக்கான் வேலி முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்த அமைப்பு நிறுவப்பட்டது. "மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் டிஜிட்டல் நுண்ணறிவை மேம்படுத்தும்" என்று அப்போதே கூறப்பட்டது. அது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.

புதிய AI எப்படி வேலை செய்கிறது?

AI மற்றும் இயந்திர கற்றல் மூலம் பயிற்சி பெற்ற இந்த அமைப்பு, உரையாடல் இடைமுகம் மூலம் தகவல்களை வழங்கிடவும், கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்திலிருந்து பெறப்படும் மெசேஜ்கள், கட்டுரைகைளைக் கொண்டு இதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

Open Ai எப்படி பயன்படுத்தலாம்?

ஆரம்பகால பயனர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை கூகுளுக்கு மாற்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் இது கோடிங் எழுதுவதற்கான வசதிகள், லேஅவுட் சிக்கல்கள் என பல சிக்கலான கேள்விகளுக்கு விளக்கங்கள், பதில்கள் மற்றும் தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டது.

ஆன்லைனில் வெப்சைட் உருவாக்குதல், அதற்கான கட்டுரைகள் எழுதுததல், தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களது வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல், பரிந்துரைகளை வழங்குதல் என பல்வேறு பயனுள்ள தகவல்களை இந்த புதிய AI வழங்குகிறது. 

என்னது iPhone-ல் இருப்பது Sony கேமரா சென்சாரா? நீண்ட கால வதந்தி உண்மையானது!

ChatGPT தொழில்நுட்பத்தால் பணியாளர்களுக்கு பாதிப்பு இருக்குமா? 

பேராசிரியர்கள் முதல் புரோகிராமர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய உள்ளடக்க தயாரிப்பைச் சார்ந்துள்ள தொழில்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தால் வழக்கற்றுப் போய்விடலாம் என்ற கூறப்படுகிறது. 

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு இளங்கலைப் பட்டதாரி பரீட்சை கேள்விகளுக்கான விடைகளை சமர்ப்பித்தால் அவருக்கு முழு மதிப்பெண்கள் கிடைக்கும். அந்த அளவுக்கு துல்லியமாக பதில்களை உருவாக்கியுள்ளனர், மேலும் புரோகிராமர்களுக்கு தெளிவற்ற நிரலாக்க மொழிகளில் குறியீட்டு சவால்கள் இருந்தால், அதை வெறும் ஒரு சில நொடிகளில் தீர்த்துவிடும் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios