Asianet News TamilAsianet News Tamil

என்னது iPhone-ல் இருப்பது Sony கேமரா சென்சாரா? நீண்ட கால வதந்தி உண்மையானது!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் சோனியின் கேமரா சென்சார் பயன்படுத்தப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வந்த நிலையில், ஆப்பிள் சிஇஓ அது குறித்து பேசியுள்ளார்.

iPhones have been using Sony camera sensors for over 10 years, says apple ceo Tim Cook
Author
First Published Dec 14, 2022, 7:53 PM IST

ஐபோன் என்றாலே அதன் தரம் தான். உலகிலேயே பல ஆண்டுகளாக நம்பர் ஒன் ஸ்மார்ட்போனாக ஆப்பிளின் ஐபோன் இருந்து வருகிறது. விலை அதிகம் என்றாலும், அதிலுள்ள தரம் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு ஈடாகாது என்று பலரும் கூறுவது வழக்கம். இதனால் ஐபோன் மற்றும் ஆப்பிள் பிற தயாரிப்புகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். 

குறிப்பாக, ஐபோனில் உள்ள கேமரா தரம் மற்ற எந்த ஸ்மார்ட்போன்களிலும் கிடையாது. 12 மெகா பிக்சல் கேமரா தான் என்றாலும், அது ஒரிஜினல் சென்சார், ஒரிஜினல் ரெசொல்யூசன் சென்சார் ஆகும். இன்னும் சொல்லப்போனால், ஐபோனில் உள்ள 12 மெகா பிக்சல் கேமராவானது, 200 மெகா பிக்சல் ஸ்மார்ட்போன் கேமராவே இருந்தாலும், அதற்கு ஈடாகாது. 

இப்படியான சூழலில், ஐபோனில் சோனி கேமராவின் சென்சார் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதனால் தான் ஐபோன் கேமரா துல்லியமாக இருக்கிறது என்ற வதந்தியும் பல ஆண்டுகளாக இருந்த வருகிறது. 

எச்சரிக்கை! OTP இல்லாமலே வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி!!

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் சோனி கேமரா சென்சாரை தான் பயன்படுத்தி வருவதாக ஆப்பிள் சிஇஓ டிம் குக் உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதுதொடர்பாக டிம் குக் தனது டுவிட்டர் பக்கத்தில், கேமரா சென்சார் லேப்பில், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், ‘ஐபோனுக்கான உலகின் முன்னணி கேமரா சென்சார்களை உருவாக்குவதற்காக, சோனியுடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இன்று குமாமோட்டோவில் உள்ள அதிநவீன வசதியை எனக்குக் காட்டியதற்காக கென் மற்றும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் புதிய 48 மெகா பிக்சல் கேமரா சென்சாரானது சோனி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.  இப்போதைக்கு, ஐபோன் 15 சீரிஸ் கேமராக்களில் ஆப்பிள் மற்றும் சோனி என்ன மேம்பாடுகளைக் கொண்டுவருகின்றன என்பதையும், பெரிஸ்கோப் 5x அல்லது 10x ஆப்டிகல் ஜூம் லென்ஸ் கார்டுகளில் உள்ளதா என்பதையும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios