வேலை வேண்டுமா..? ரயில் நிலையத்தில் “வைபை ஹாட்ஸ்பாட் மையம்” வைக்க அரிய வாய்ப்பு......
ரயில் நிலையத்தில் “வைபை ஹாட்ஸ்பாட் மையம்” வைக்க வேண்டுமா..?
நாடு முழுவதும், 5௦௦ ரயில் நிலையங்களில் வைபை ஹாட்ஸ்பாட் மையங்களை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் , நாடு முழுவதும், பின்தங்கிய பகுதிகளில் உள்ள 500 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு வைபை ஹாட்ஸ்பாட் மையங்கள் அமைக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது .
இதன் மூலம், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது .இந்த வைபை ஹாட்ஸ்பாட் மையங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், செல்போன், டிடீஎச் சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்தல், இன்சூரன்ஸ் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
வைபை ஹாட்ஸ்பாட் மையங்கள், ரயில்வேயின் தொலைத்தொடர்பு அமைப்பான ரயில் டெல் அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ?
வைபை ஹாட்ஸ்பாட் மையங்களை அமைக்க விரும்பும் இளைஞர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும். இச்சான்றிதழ்களை கொண்டு, வேலையில்லா பட்டதாரிகள் வங்கிகளில் கடன் பெற்று, வைபை ஹாட்ஸ்பாட் மையங்களை அமைக்கலாம். இந்த மையங்கள் மூலம், இதுவரை இணையதள சேவை கிடைக்காத கிராமப்புற மக்கள் பயன் பெறுவதுடன், அவர்கள் நீண்ட தூரத்துக்கு சென்று அரசின் சேவைகளை பெற வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது .