வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து ரசிப்பவர்களுக்காக விரைவில் புதிய வசதி
21ம் நூற்றாண்டில் உலகம் சுருங்கிவிட்டது வாட்ஸ்அப்பில் நாம் சொல்லக்கூடிய தகவலை, புகைப்படமாக, வீடியோவாக, டெக்ஸ்ட் மெசேஜா ஒருவருக்கு அனுப்பிவைக்கமுடியும்.
21ம் நூற்றாண்டில் உலகம் சுருங்கிவிட்டது வாட்ஸ்அப்பில் நாம் சொல்லக்கூடிய தகவலை, புகைப்படமாக, வீடியோவாக, டெக்ஸ்ட் மெசேஜா ஒருவருக்கு அனுப்பிவைக்கமுடியும்.
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதுப்புது அப்டேட்கள் வந்தவாறு உள்ளன. அதிலும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்வோருக்கு வசதியாக விரைவில் புதிய வசதி வர இருக்கிறது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தற்போது வீடியோ, புகைப்படங்கள்,பாடல்கள் மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்க முடியும். ஆனால், விரைவில் பயன்படுத்துவோர் குரலை பதிவு செய்து அதையே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.
அதாவது விரைவில் வாய்ஸ் ஸ்டேட்டஸை வசதியை வாட்ஸ்அப் கொண்டு வர இருக்கிறது. இதன் மூலம் ஒரு பொதுவான செய்தியைஅனைவருக்கும் பகிர்வதற்கு வாய்ஸ் ஸ்டேட்டஸ் உதவும். தங்களைத் தொடர்பு கொள்பவர்களுக்கு ஏதாவது தகவல் தருவது, குறிப்புகள் தருவது போன்றவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட முடியும்.
என்எஸ்இ ஒட்டுக்கேட்பு விவகாரம்: தொடர் சிக்கலில் சித்ரா: அமலாக்கப் பிரிவு புதிய வழக்கு
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வந்துவி்ட்டால் புதிதாக குரலைப் பதிவு செய்து பதிவேற்றம் செய்வதோடு, ஏற்கெனவே இருக்கும் பைல்களையும் பதிவேற்றம் செய்யலாம். வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் புகைப்படம், வீடியோக்களுக்கு என்ன விதமான பாதுகாப்பு ்அம்சங்கள் இரு்க்குமோ அதே பாதுகாப்பு, பிரைவசி வாய்ஸ்களுக்கும் உண்டு.
இ்ந்த வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் தற்போது சோதனை முயற்சியில் இருந்து வருகிறது. இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டபின் நடைமுறைக்கு வரும். வாய்ஸ் ஸ்டேட்டஸிலும் வழக்கமான வசதிகளான ப்ரைவஸி செட்டிங் போன்றவை இருக்கும்.
ரூ.1000 கோடிக்கு மருத்துவர்களுக்கு இலவசங்கள்: ஐடி ரெய்டில் டோலோ 650 தயாரிப்பு நிறுவன மோசடி அம்பலம்
அதாவது உங்கள் குரலை யாரெல்லாம் கேட்க வேண்டும், கேட்க வேண்டாம் என்பதை தீர்மானிக்க முடியும். உங்கள் ப்ரைவெஸி செட்டிங்கை எவ்வாறு மாற்றி அமைக்கிறீர்களோ அதற்கு ஏற்றார்போல் உங்கள் குரலை மற்றவர்கள் கேட்க முடியும்