என்எஸ்இ ஒட்டுக்கேட்பு விவகாரம்: தொடர் சிக்கலில் சித்ரா: அமலாக்கப் பிரிவு புதிய வழக்கு
என்எஸ்இ ஊழியர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராம்கிருஷ்ணன், ரவி நரேன், மும்பை போலீஸ் முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கையும் அமலாக்கப்பிரிவு புதிதாக பதிவு செய்துள்ளது.
என்எஸ்இ ஊழியர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராம்கிருஷ்ணன், ரவி நரேன், மும்பை போலீஸ் முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கையும் அமலாக்கப்பிரிவு புதிதாக பதிவு செய்துள்ளது.
ஏற்கெனவே சிபிஐ வழக்குப் பதிவுசெய்த நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
2009 முதல் 2017ம்ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தை ஊழியர்களின் தொலைப்பேசிகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.
மும்பை முன்னாள் போலீஸ் ஆணையர் சஞ்சய் பாண்டேவுக்கு சொந்தமான இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் ரெய்டு நடத்தினர்.
சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் “ 2009 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேசியப் பங்குச்சந்தையில் பணியாற்றும் ஊழியர்களின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன.
சித்ரா ராம் கிருஷ்ணன், ரவி நரேன் கேட்டுக்கொண்டதற்கின சஞ்சய் பாண்டே ஒட்டுக்கேட்டுள்ளனர். இந்த வழக்கில் எஸ்எஸ்இ முன்னாள் சிஇஓ நரேன், சித்ரா ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ரவி வாரணாசி, மகேஷ் ஹால்திபூர் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்க் ஃபைபர் வழக்கில், சித்ரா ராம்கிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன், ஆகியோர் உள்பட 18 நிறுவனங்களுக்கு ரூ.43.8 கோடி அபராதம் விதித்து செபி இரு வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதில் சித்ராவுக்கு மட்டும் ரூ.5 கோடி அபராதம். தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.7 கோடி அபராதம், என்எஸ்இ வர்த்தகப்பிரிவு அதிகாரி ரவி வாரணாசிக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.