பிரத்யேகமான படிவங்களை உருவாக்குவதற்கான ஃப்ளோஸ் என்ற அம்சம் வாட்ஸ்அப்பில் இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும்.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிசினஸ் ஆப் பயனர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் நோக்கில் பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. புதிய அம்சமான ஃப்ளோஸ் (Flows), பிசினஸ் பயனர்கள் ரயில் டிக்கெட் புக்கிங், உணவு ஆர்டர் செய்தல், சந்திப்புகளை முன்பதிவு செய்தல் போன்றவற்றுக்கு பிரத்யேகமான படிவங்களை உருவாக்க முடியும்.

"ஃப்ளோஸ் மூலம் வணிக நிறுவனங்கள் பல்வேறு தேவைகளுக்கான பிரத்யேகமான படிவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்" என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. இந்த அம்சம் இந்தியாவில் மட்டும் அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் கார்ட்டில் (cart) பொருட்களைச் சேர்க்கவும், தங்களுக்கு விருப்பமான பேமெண்ட் முறையில் பணம் செலுத்தவும் முடியும். UPI, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் பலவிதமான முறைகளில் எதை பயன்படுத்தி வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம் என்று அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் தொழில் தொடங்கப் போறீங்களா? அதிக லாபம் கொடுக்கும் தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கு!

ஆன்லைன் பேமெண்ட் நிறுவனங்களான ரேசர்பே (Razorpay) மற்றும் பேயூ (PayU) ஆகியவற்றுடன் இணைந்து வாட்ஸ்அப் பயனர்கள் கிரெடிட் டெபிட் கார்டுகள், UPI மற்றும் பிற வழிங்களில் பணம் செலுத்தும் வசதியை அளிக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் வணிக நிறுவனங்களுக்கு மெட்டா வெரிஃபைட் என்ற வசதியையும் கொடுக்கிறது. வணிக நிறுவனங்கள் மேம்பட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளைப் பெற, மெட்டா வெரிஃபைட் பேட்ஜை பெறலாம். “மெட்டா வெரிஃபைடு மூலம் இணையத் தேடலில் எளிதாகக் கண்டறியப்படும் வகையிலான வாட்ஸ்அப் பக்கத்தை உருவாக்குவது உள்பட கூடுதல் வசதிகள் கிடைக்கும். வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்மில் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்கு முன், சிறு வணிகர்களிடம் மெட்டா வெரிஃபைட் சோதனையை விரைவில் தொடங்க இருக்கிறோம்” என்று மெட்டா நிறுவன்ம கூறியிருக்கிறது.

வாட்ஸ் அப் இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) சேவை 10 கோடி பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, மும்பையில் நடந்த உரையாடல் நிகழ்வில் பேசிய மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், மக்களும் வணிக நிறுவனங்களும் புதிய வசதிகளைச் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இந்தியா உலகிற்கு வழிகாட்டுகிறது என்று கூறியிருக்கிறார்.

ஜி20 மாநாட்டின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புறக்கணித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!