வாட்ஸ்அப்பில் இத்தனை ஆப்ஷன்களா? இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்..!

வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய விவரங்கள் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் தெரியவந்துள்ளது. 

 

WhatsApp said to be working on undo deleted message, double verification for logins and more

வாட்ஸ்அப் செயலியில் புதுப் பது அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருவது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது. செயலியை இன்றைய பயனர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புது அம்சங்களை வழங்குவதில் வாட்ஸ்அப் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய விவரங்கள் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் தெரியவந்துள்ளது. 

மேலும் வாட்ஸ்அப் செயலியில் பெரிய ஃபைல்களை அனுப்புவதற்கான வசதசி வழங்கப்பட்டது. அதன்படி செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். 

அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது:

வாட்ஸ்அப் பீட்டா செயலியின் 2.22.13.5 வெர்ஷனில் அழிக்கப்பட்ட மெசேஜை அண்டு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது குறுந்தகவல்களை “delete for me” ஆப்ஷனில் டெலிட் செய்து இருந்தால், அவற்றை அண்டு செய்ய முடியும். வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவலை “delete for me”  கொடுத்து டெலிட் செய்யும் போது, அதனை திரும்ப பெறுவதற்கான வசதி குறித்து வாட்ஸ்அப் ஸ்கிரீனின் கீழ்புறத்தில் தகவல் தோன்றுகிறது. இவ்வாறு செய்ய சில நொடிகள் வரை கால அவகாசமும் வழங்கப்படுகிறது.

WhatsApp said to be working on undo deleted message, double verification for logins and more

ஃபைல் ஷேரிங் அம்சம்:

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.13.6 இல் அதிகளவு ஃபைல் ஷேரிங் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் அதிகபட்சம் 2GB வரையிலான தரவுகளை பரிமாறிக் கொள்ள முடியும். 

ஸ்பிலாஷ் ஸ்கிரீன் டிசேபில்:

பீட்டா வெர்ஷன் 2.22.12.8 வாட்ஸ்அப் செயலியில் ஆண்ட்ராய்டு 12 தளத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் API-இல் ஆப் லான்ச் அனிமேஷன் டிசேபில் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போதைய வெர்ஷனில் வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் அனிமேஷன் தற்போது தெரிகிறது. எனினும், இந்த மாற்றம் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் மட்டுமே தெரியும். 

டபுள் வெரிபிகேஷன்:

ஒரு அக்கவுண்டினுள் லாக் இன் செய்ய முற்படும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வேறு ஒரு மொபைல் போனில் போன் நம்பர் கொண்டு லாக் இன் செய்ய முற்பட்டால், அக்கவுண்ட்-ஐ உறுதிப் படுத்த இனி கூடுதலாக மற்றொரு வெரிபிகேஷனை செய்து முடிக்க வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios