WhatsApp முக்கிய அப்டேட்.. பல காலமாக எதிர்பார்த்த அம்சம் அமலுக்கு வருகிறது!

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு அம்சம் தற்போது சோதனை முறையில் வந்துள்ளது. விரைவில் இந்த அம்சம் அமலுக்கு வருகிறது. அது என்ன அம்சம், அதனால் என்ன பலன் என்பது குறித்து விரிவாக இங்குக் காணலாம்.

WhatsApp Phone Companion Mode Feature Let Users Use same whatsApp in 2 Phones


சமூக ஊடகங்கள், மெசேஜிங் தளங்கள் புற்றீசல் போல் தற்போது எக்கச்சக்கமாக உள்ளன. ஆனால், இவையனைத்திற்கும் வாட்ஸ்அப் தான் முன்னோடி. தினமும் 100 எஸ்எம்எஸ் வரம்பில் மெசேஜ் செய்து கொண்டிருந்த காலத்தில், எந்தவிதமான கட்டணமும் இன்றி வெறும் மொபைல் டேட்டா கொண்டு, வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் செய்யும் வசதி வந்தவுடன் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பல மெசேஜிங் செயலிகள் வந்துவிட்டன. 

தற்சமயம் வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக டெலிகிராம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் வாட்ஸ்அப்பில் இல்லாத பல அம்சங்கள் டெலிகிராமில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தரத்தை தக்கவைக்கும் வகையில், பயனர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்ஸ்அப்பிலும் அப்டேட் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில், வாட்ஸ்அப் பயனர்கள் பல காலமாக எதிர்பார்த்து கொண்டிருப்பது இரண்டு போனில் ஒரே வாட்ஸ்அப் நம்பரை பயன்படுத்தும் அம்சம் தான். வாட்ஸ்அப்பை பொறுத்தவரையில் தற்போது மொபைல், டேப்லேட், கம்ப்யூட்டர் என ஒரே நேரத்தில், ஒரே நம்பரில் உள்ள வாட்ஸ்அப்பை நான்கு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.  ஆனால், இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒரே வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.

இந்தக் குறையை தீர்க்கும் வகையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் v2.22.24.18 தளத்தில், இரண்டு மொபைல்களில் ஒரே வாட்ஸஅப்பை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட சில வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு தற்போது கிடைத்திருக்கலாம். 

அட இவ்ளோ தானா! இனி Amazon Pay Balance-ஐ உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்!!

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் Link with your phone என்ற ஆப்ஷன் இருக்கும். இதனை கிளிக் செய்து, QR குறியீடை ஸ்கேன் செய்தால், உங்களது இரண்டாம் ஸ்மார்ட்போனிலும் நீங்கள் வைத்திருக்கும் அதே நம்பருடன் கூடிய வாட்ஸ்அப் ஆக்டிவேட் ஆகி விடும். உங்கள் வாட்ஸ்அப் எந்தெந்த சாதனங்களில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, Linked Devices என்பதில் சென்று பார்க்கலாம். 

ஒரே நம்பர் வாட்ஸ்அப் இரண்டு போனில் பயன்படுத்தும் இந்த அம்சம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல ஸ்மார்ட்போன்களில் ஒரே செயலியைப் பயன்படுத்தும் அப்டேட் ஏற்கெனவே டெலிகிராம் செயலியில் வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios