watsapp introduced new business watsapp group

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியை வாங்கியது.

வாட்ஸ்அப் பயன்பாடு மிகவும் எளிமையாக உள்ளதால்,மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில்,மீண்டும் தன்னுடைய சேவையை அதிகரிக்கவும்,அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லவும் தற்போது வாட்ஸ்அஆப் பிசினஸ் என்ற புது செயலியை அறிமுகம் செய்து உள்ளது.

இந்த செயலி பிசினஸ் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். இந்த குழுவில் உள்ளவர்களும் மிக எளிதில் உரையாட வசதி செய்யப்பட்டு உள்ளது.

சிறு தொழில் செய்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உரையாடலை வலுப்படுத்தவும், அதற்காக பயன்படுத்தப்படும் பிசினஸ் வார்த்தைகள் கொண்ட ஒரு ஆப் பாக உள்ளது.

இப்போதைக்கு இந்த ஆப்ஸ் ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டும் பயன்படுத்த முடியும். அதே போன்று தற்போதைக்கு இந்தோனேஷியா, இத்தாலி, மெக்ஸிகோ, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் மட்டும் பயன்படுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.