MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Xiaomi 17 Ultra விலையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ஸ்மார்ட்போன் சந்தை!

Xiaomi 17 Ultra விலையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ஸ்மார்ட்போன் சந்தை!

Xiaomi 17 Ultra புதிய Xiaomi 17T சீரிஸ் இந்தியாவில் ஏப்ரல்-மே மாதங்களில் வெளியாகலாம் என தகவல். மேலும், Xiaomi 17 சீரிஸ் போன்களின் விலை குறித்த முக்கிய அப்டேட்!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 07 2026, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Xiaomi 17 Ultra
Image Credit : Gemini

Xiaomi 17 Ultra

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி (Xiaomi), தனது புதிய 'Xiaomi 17' மற்றும் 'Xiaomi 17 Ultra' ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வரும் மார்ச் 11-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த எதிர்பார்ப்பு டெக் உலகத்தில் அதிகமாக இருக்கும் நிலையில், சியோமி ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மற்றொரு புதிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல்முறையாக தனது 'T-சீரிஸ்' (T-Series) போன்களையும் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 'Xiaomi 17T' மற்றும் 'Xiaomi 17T Pro' ஆகிய இரண்டு மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

26
எப்போது வெளியாகும்?
Image Credit : Google

எப்போது வெளியாகும்?

பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, Xiaomi 17T சீரிஸ் வரும் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகியுள்ள கசிவுகளின் அடிப்படையில், இந்த Xiaomi 17T சீரிஸ் போன்களில் லைக்கா (Leica) லென்ஸ்களுடன் கூடிய 50MP + 12MP + 50MP ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 32MP செல்ஃபி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில், வழக்கமான 'Xiaomi 17T' மாடலில் MediaTek Dimensity 8500 சிப்செட் மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6,500mAh பேட்டரியும், டாப்-எண்ட் 'Xiaomi 17T Pro' மாடலில் Dimensity 9500 சிப்செட் மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மிகப்பெரிய 8,500mAh பேட்டரியும் வழங்கப்படலாம்.

Related Articles

Related image1
திடீர்னு விலையை குறைத்த Samsung, Xiaomi! ₹6,000-க்கு கீழ் ஸ்மார்ட் டிவி வாங்க இதைவிட நல்ல சான்ஸ் இல்லை!
Related image2
முந்துங்கள்! LG, Samsung, Xiaomi Smart TV வெறும் ரூ.14,000-க்கு கீழ்! Amazon, Flipkart-இல் பம்பர் தள்ளுபடி!
36
என்னென்ன சிறப்பம்சங்கள்?
Image Credit : Google

என்னென்ன சிறப்பம்சங்கள்?

மேலும், ப்ரோ மாடலில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் OLED 1.5K டிஸ்பிளே, அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், உள்ளமைக்கப்பட்ட கூலிங் ஃபேன் மற்றும் மெட்டல் ஃபிரேம் என பல அசத்தலான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

46
Xiaomi 17 சீரிஸ் விலை: காத்திருக்கும் அதிர்ச்சி?
Image Credit : Google

Xiaomi 17 சீரிஸ் விலை: காத்திருக்கும் அதிர்ச்சி?

மார்ச் 11-ல் வெளியாகவுள்ள ஃபிளாக்ஷிப் மாடல்களான Xiaomi 17 மற்றும் 17 Ultra போன்களின் இந்திய விலை குறித்த கசிவுகளும் தற்போது வெளிவந்துள்ளன. இந்தத் தகவல் சியோமி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருக்கக்கூடும்.

56
 விலை ரூ.1 லட்சத்தை நெருங்கலாம்
Image Credit : Google

விலை ரூ.1 லட்சத்தை நெருங்கலாம்

ஏனெனில், கடந்த ஆண்டு வெளியான Xiaomi 15-இன் விலை ரூ.64,999 ஆக இருந்த நிலையில், புதிய Xiaomi 17 மாடலின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல, டாப்-எண்ட் மாடலான Xiaomi 17 Ultra போனின் விலை ரூ.1.4 லட்சம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

66
விலை நிர்ணயம்
Image Credit : Google

விலை நிர்ணயம்

ஒருவேளை இந்த விலை நிர்ணயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரூ.80,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் OPPO Find X9 மற்றும் Vivo X300 போன்ற போன்களிடமிருந்து சியோமி கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும். எனவே, அதிகாரப்பூர்வ விலை மற்றும் வெளியீட்டு அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்பதே சிறந்தது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வேற லெவல் பேட்டரி பேக்கப்! மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் ரியல்மியின் புதிய போன்!
Recommended image2
சாட்ஜிபிடியில் புதிய மேஜிக்: கற்பனைக்கு எட்டாத வசதிகளுடன் வெளியானது OpenAI-இன் GPT-5.4!
Recommended image3
பெத்தவங்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பசங்களுக்கு ஷாக்! 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு அதிரடி தடை!
Related Stories
Recommended image1
திடீர்னு விலையை குறைத்த Samsung, Xiaomi! ₹6,000-க்கு கீழ் ஸ்மார்ட் டிவி வாங்க இதைவிட நல்ல சான்ஸ் இல்லை!
Recommended image2
முந்துங்கள்! LG, Samsung, Xiaomi Smart TV வெறும் ரூ.14,000-க்கு கீழ்! Amazon, Flipkart-இல் பம்பர் தள்ளுபடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved