இட்லிக்கு ATM ஆ? என்னங்கடா புதுசு புதுசா வைச்சுருக்கீங்க!

பெங்களூரில் 24 மணி நேரமும் ஏழு நாட்களும் சூடாக மிகவும் ருசியான இட்லி கிடைக்கிறது அதை பற்றிய தகவல்களை இங்கே காண்போம்.
 

Want Hot idlis? Visit this idli ATM in Banglore

திடீரென்று பணம் தேவைப்படும்போது அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் பசியாக இருந்தால், கடை அல்லது உணவகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, நீங்கள் எப்போதாவது ஏடிஎம்முக்குச் சென்றிருக்கிறீர்களா ? உணவகம் மூடப்பட்டாலும் கவலைப்படத் தேவையில்லை.

இரவில் திடீரென பசி எடுத்தால், இனி வரும் இட்லி 'ஏடிஎம்' உங்களுக்கு உதவும். பெங்களூரில் உள்ள ஒரு ஏடிஎமிலிருந்து 24 மணி நேரமும் இட்லி சூடாக கிடைக்கிறது. இந்த தகவல் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளதல்லவா ?  இதன் விவரங்களை பார்க்கலாம் வாங்க.

மிகவும் பிரபலமான இந்த இட்லி ஏடிஎம் பெங்களூரில் கிடைக்கிறது. இதனை இட்லி பாட் ( Idly Bot ) எனவும் வழங்குகின்றனர் . இந்த இட்லி ஏடிஎமில் இட்லி வாங்குவது மிகவும் எளிதான ஒன்று. இதில் சாக்லேட் இட்லி, பொடி இட்லி, பெரி பெரி இட்லி , இத்தாலியன் ஹெர்ப்ஸ் இட்லி போன்ற பல வகை இட்லிக்கள் கிடைக்கிறது.

உங்களுக்கு விருப்பமான  இட்லியை தேர்வு செய்து எந்த நேரம் வேண்டுமானாலும் நீங்கள் சுட சுட வாங்கிக் கொள்ளலாம். இந்த மெஷினில் உள்ள ஸ்கேன் கோடை உங்கள் ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால் இட்லிக்கான மெனு உங்கள் போனில் தோன்றும்.

அடடே! WhatsApp-ல் இப்படி கூட வீடியோ அனுப்ப முடியுமா!!

வெறும் இட்லி மட்டுமல்லாமல் வித விதமான சட்னி , சாம்பார், வடை, சமோசா போன்ற அனைத்தும் இதில் கிடைக்கிறது. உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து ஆர்டர் செய்த அடுத்து பத்தாவது நொடி உங்கள் கையில் சூடான இட்லி வந்துவிடும். இதற்கான பணத்தை நீங்கள் QR கோடினை ஸ்கேன் செய்து செலுத்த வேண்டும்.

ஃப்ரெஷ் ஹாட் ( Freshot ) என்ற ரோபோடிக் கம்பெனி இந்த இட்லியை தயார் செய்கிறது. இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களான யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வைரலாகி வருகிறது. இனி வரும் காலங்களில் மெட்ரோ ஸ்டேஷன் , மருத்துவமனைகள் போன்றவற்றில் இதை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios