418கி.மீ. ரேன்ஜ்.... இந்தியாவில் உற்பத்தியாகும் முதல் எலெக்ட்ரிக் லக்சரி கார்... வால்வோ அதிரடி..!

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் போது வால்வோ XC40 ரிசார்ஜ் விலையை அதிகளவு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்ய முடியும். 

Volvo XC40 Recharge to be India's first locally assembled luxury EV

வால்வோ இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனமான XC40 ரிசார்ஜ் மாடல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய வால்வோ எலெக்ட்ரிக் மாடல் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. 

இது மட்டும் இன்றி இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முதல் ஆடம்பர வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை வால்வோ நிறுவனம் பெற்று இருக்கிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் போது வால்வோ XC40 ரிசார்ஜ் விலையை அதிகளவு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்ய முடியும். 

Volvo XC40 Recharge to be India's first locally assembled luxury EV

உள்நாட்டு உற்பத்தி:

சமீப காலங்களில் வால்வோ நிறுவனம் ஃபிளாக்‌ஷிப் XC90, XC60, XC40 மற்றும் S90 செடான் போன்ற மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய துவங்கி இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் S60 செடான் மாடல் மட்டுமே முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. 

வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலை கடந்த ஆண்டு காட்சிப்படுத்தி இருந்தது. இதன் வெளியீடு இந்த மாதம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருந்தது. எனினும், செமிகடண்க்டர் குறைபாடு காரணமாக வெளியீடு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Volvo XC40 Recharge to be India's first locally assembled luxury EV

அம்சங்கள்:

புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் காம்பேக்ட் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது. இதில் பிளான்க்டு ஆப் கிரில், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், ஹேண்ட்ஸ்-ஃபிரீ அம்சம் கொண்ட டெயில்கேட், டூ ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். உடன் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் ஆல் வீல் டிரைவ் செட் அப் கொண்டு இருக்கிறது. இதில் 240 ஹெச்.பி. திறன் வழங்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை 408 ஹெச்.பி. பவர், அதிகபட்சம் 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

வால்வோ நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் XC40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஐரோப்பிய WLTP டெஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios