அடேங்கப்பா.. Jio, Airtel விட சிறப்பான பிளானை வைத்திருக்கும் Vi
ஜியோ, ஏர்டெலில் கூட இல்லாத அற்புதமான ரீசார்ஜ் பிளான் வோடஃபோன் ஐடியாவில் உள்ளது. அது என்ன திட்டம், என்னென்ன பலன்கள் உள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் வோடஃபோன் ஐடியா உள்ளது. மேலும், 5ஜி வந்த பிறகு வோடஃபோனின் நிலைமை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. Vi வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பலவிதமான முயற்சிகளை வோடபோன் ஐடியா நிறுவனம் எடுத்து வருகிறது.
இதனிடையே வோடஃபோன் ஐடியாவில் இருக்கும் ஒரு பிளான் கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. வோடபோனின் இந்த பிளானின் பெயர் Hero Unlimited Benefits ஆகும். 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஹீரோ அன்லிமிடேட் பிளானை பெறலாம். இதில் மூன்று விதமான பலன்கள் முக்கியமாக கிடைக்கிறது. அவை: Weekend Data Rollover, Data Delights, Binge all Night ஆகும்.
1. வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் (Weekend Data Rollover)
வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் என்பது திங்கள் முதல் வெள்ளி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி எஞ்சியுள்ள டேட்டாவை, மொத்தமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் இந்த 2ஜிபி டேட்டாவை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருந்தால், அவை அனைத்தும் சேர்த்து வாரவிடுமுறைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. டேட்டா டிலைட் (Data Delights)
இது அவசர காலத்திற்கு உதவும் டேட்டா ஆகும். அவசரத் தேவைகளுக்காக ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு மாதத்திற்கு 2ஜிபி டேட்டா இலவசமாக ஒதுக்கப்பட்டிருக்கும். அவசரகாலங்களில் இந்த டேட்டாவை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரே மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் Airtel 5G சேவைக்கு மாறினர்!
3. இரவில் இலவச டேட்டா (Binge all Night)
இரவில் இராக்கோழி போல் முழித்திருப்பவர்களுக்காகவே இந்த பலன் வழங்கப்படுகிறது. இதன்படி, இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் இலவசமாக பிரவுசிங் செய்யலாம், ஸ்ட்ரீமிங் படங்களைப் பார்க்கலாம், சேட் செய்யலாம். இது முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி டேட்டாவும் குறைக்கப்படாது.
இவ்வாறு மூன்று அற்புதமான பலன்களைக் கொண்ட ரீசார்ஜ் பிளான் வோடஃபோன் ஐடியா நெட்வொர்க்கில் உள்ளது. இதுபோன்ற பிளான் முன்னனி நெட்வொர்க்குகளான ஜியோ, ஏர்டெலில் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.