விக்ரம் லேண்டர் விவகாரம்... இஸ்ரோ சிவனின் ஈகோவை தூண்டிவிடுகிறாரா சண்முகம் சுப்ரமணியன்..?
ஏதோ ஒரு துறையில் இருப்பவர் கண்டுபிடித்து விட்டாரே. விண்வெளித்துறை அறிவியலாளரான தமக்கு இது பெரும் பின்னடைவு என இஸ்ரோ சிவன் கருதுவதால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடிருக்கிறாரா இஸ்ரோ சிவன்.
விக்ரம் லேண்டர் தரையிரக்கிய போது விண்வெளி மையத்துடனான கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் விக்ரம் லேண்டர் தேடப்பட்டு வந்தது. இருப்பினும் விக்ரம் லேண்டர் என்னவாயிற்று என மர்மம் நிலவி வந்தது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்த மர்மத்தை நாசா முடித்து வைத்துள்ளது.
இஸ்ரோவுடன் இணைந்த நாசா இஸ்ரோ-வுடன் சேர்ந்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா இணைந்து செயல்பட்டது. நாசாவின் விண்கலமான எல்ஆர்ஓ விக்ரம் லேண்டருக்கு மேலே பயணித்தது. அப்போது விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், விக்ரம் லேண்டர் குறித்து எந்த தகவலும் அறியமுடியவில்லை.
ஆனால் சந்திரயான் 2 முழுமையாக தோல்வி அடையவில்லை. சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் செயல்படவில்லை என்றாலும் ஆர்பிட்டர் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில் நாசா தற்போது விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாசா விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக நேற்றைய தினம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மெயில் மற்றும் டிவிட் ஆதாரங்களை வைத்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக நாசா வெளியிட்ட தகவலால் சண்முக சுப்ரமணியன் ஒரே நாளில் பிரபலமானார்.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், ’’விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கருவி முன்பே கண்டுபிடித்துவிட்டோம். இஸ்ரோ இணையத்தில் எப்போது வெளியிடப்பட்டது விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது தொடர்பான தகவலை ஏற்கனவே இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறோம். மற்றவர்களின் ஆய்வை நாங்கள் சரிபார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை. இப்போதும் இணைய பக்கத்தில் அந்த தகவல் தேதியுடன் இருக்கிறது. நீங்கள் அதை சோதனை செய்து பார்க்கலாம். செப்டம்பர் 10ம் தேதி இது தொடர்பான தகவலை வெளியிட்டபோது, லேண்டரை தொடர்பு கொள்ள முடியாததால் அதை பெரிதாக சொல்லவில்லை.
லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதால், நாங்கள் சண்முக சுப்ரமணியம் அளித்த புகைப்படங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டதாகவும், ஆனால் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது’’என அவர் தெரிவித்தார்.
இதில் கவனிக்க வேண்டிய அவசியம் என்னவென்றால் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக பொறியாளர் சண்முக சுப்ரமணியன் தானாக அறிவித்துக் கொள்ளவில்லை. அவர் அனுப்பிய தகவலைக் கொண்டு விக்ரம் லேண்டர் இருக்கு இடம் உறுதி செய்யப்பட்டதாக நாசாவே பாராட்டுத் தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை இணையத்தில் பதிவேற்றி இருப்பதாகவும் கூறும், இஸ்ரோ சிவன் ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்பவர். அப்படி இருக்கும்போது மிகப்பெரிய விஷயமாக நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்த விக்ரம் லேண்டர் மர்மம் விலகிய பின் அதாவது கண்டுபிடிக்கப்பட்ட பின் அதனை பெரிதாக சொல்லவில்லை என அவர் கூறுவதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது?
இந்த விவகாரத்தில் இஸ்ரோ சிவனை ஈகோ இடித்துப்பார்க்கிறதா என கேள்வி எழுகிறது. அதாவது இஸ்ரோவுக்கும் நாசாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஈகோவா? அல்லது ’’விண்வெளி ஆய்வை மேற்கொள்ள சராசரியான அறிந்து கொள்ளும் அறிவு இருந்தால் எந்தத் துறையில் இருப்பவர்கள் வேண்டுமானாலும் சாதிக்கமால். விண்வெளி படிப்பு படித்திருக்க வேண்டிய அவசியமில்லை’’எனக் கூறி இருந்தார் சண்முகம் சுப்ரமணியன். ஏதோ ஒரு துறையில் இருப்பவர் கண்டுபிடித்து விட்டாரே. விண்வெளித்துறை அறிவியலாளரான தமக்கு இது பெரும் பின்னடைவு என இஸ்ரோ சிவன் கருதுவதால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடிருக்கிறாரா இஸ்ரோ சிவன்.
அது ஒருபுறமிருக்கட்டும். சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், நேற்றே இஸ்ரோ சிவன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டாமா? ஒரு நாள் தாமதாக அவர் அறிவித்து இருப்பதன் நோக்கம் என்ன?