வேற லெவல் அப்டேட்... ரோபோட் மூலம் உணவு டெலிவரி.... அதிரடி காட்டும் உபெர்...!
சைடுவாக் ரோபோட்களை செர்வ் ரோபோடிக்ஸ் நிறுவனம் வழங்கி இருப்பதாக உபெர் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
கலிபோர்னியாவில் தானியங்கி வாகனங்கள் மூலம் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்து இருப்பதாக உபெர் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் தனது குளோபல் டிரைவர் செயலியில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை சேர்த்து வருவதாகவும் உபெர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உபெர் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஒரு உணவு டெலிவரி சேவையில் தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதே போன்ற மற்றொரு திட்டத்தில் சைடுவாக் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை உபெர் ஈட்ஸ் சேவைகளில் அமலாக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக தானியங்கி வாகனம் மற்றும் ரோபோட்கள் கலிபோர்னியாவை அடுத்த சாண்டா மோனிகா மற்றும் மேற்கு ஹாலிவுட் பகுதிகளில் வலம் வந்து டெலிவரி செய்து வருகின்றன.
தானியங்கி வாகனம்:
இரு திட்டங்களில் பங்கேற்க விரும்பாத வாடிக்கையாளர்கள் இவற்றை தவிர்ப்பதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. தானியங்கி கார் திட்டம் மோஷனல் எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் கோ மற்றும் ஆப்டிவ் பி.எல்.சி. இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் மோஷனல்.
சைடுவாக் ரோபோட்களை செர்வ் ரோபோடிக்ஸ் நிறுவனம் வழங்கி இருப்பதாக உபெர் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இரு சேவைகளிலும் உள்ள வாகனங்கள் மற்றும் ரோபோட்களை மனித ஆபரேட்டர்கள் கவனித்து வருகின்றனர். இத்துடன் அமெரிக்காவில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் உள்ள பகுதிகளை தனது டிரைவர் செயலியில் தெரிவிக்க இருப்பதாக உபெர் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனம்:
முதற்கட்டமாக இந்த சேவை அமெரிக்காவில் துவங்கி இருக்கும் நிலையில், உலகின் மற்ற நாடுகளிலும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. 2030 ஆண்டிற்குள் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் உபெர் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தனது சேவையில் பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது.
யு.எஸ். கோச்வேஸ் வாடகை சேவை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்டி மற்றும் கோச் பேருந்துகள், பயணிகள் வேன் உள்ளிட்டவைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியை அமெரிக்காவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக உபெர் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.