இனி ஒரே ஃபோனில் 2 வாட்ஸ் கணக்குகளை பயன்படுத்தலாம்.. பயனர்களுக்கு குட்நியூஸ் சொன்ன மெட்டா..!

ஒரே ஃபோனில் 2 வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

Two Whatsapp accounts on one phone Meta gave new solution for users Rya

உலகளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. பல கார்ப்பரேட் அலுவலகங்கள் வாட்ஸ்அப்பை தங்கள் உள் தொடர்புகளுக்காக ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் வாட்ஸ் அப் செயயில் வசதி, அம்சங்கள் பாராட்டப்பட்டு வருகிறது. எனினும் வாட்ஸ் அப்-ல் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உரையாடல்களை வேறுபடுத்திப் பார்க்கும் சவால் சில காலமாகவே நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க் இந்த பிரச்சினைக்கு ஒரு நடைமுறை தீர்வை வெளியிட்டுள்ளார். வாட்ஸ்அப்பின் கணக்கு மாறுதல் அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட்டைக் கொண்ட பேஸ்புக் இடுகையை அவர் பகிர்ந்துள்ளார், மேலும் ஒருவரின் தொலைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை நிர்வகிப்பதற்கான வரவிருக்கும் அம்சம் குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த பதிவில் “ WhatsApp இல் இரண்டு கணக்குகளுக்கு இடையில் மாற்றிக்கொள்ளலாம். விரைவில் நீங்கள் பயன்பாட்டிற்குள் ஒரு தொலைபேசியில் இரண்டு WhatsApp கணக்குகளை வைத்திருக்க முடியும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு இடையில் மாறுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்காக ஒவ்வொரு முறையும் வெளியேறவோ, இரண்டு ஃபோன்களை எடுத்துச் செல்லவோ அல்லது தவறான இடத்திலிருந்து செய்தி அனுப்புவதைப் பற்றி கவலைப்படவோ தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இரண்டாவது WhatsApp கணக்கை எப்படி அமைப்பது?

  • வாட்ஸ் அப்-ல் இரண்டாவது கணக்கை அமைக்க, உங்களுக்கு இரண்டாவது ஃபோன் எண் மற்றும் சிம் கார்டு அல்லது பல சிம் அல்லது eSIMஐ ஏற்கும் ஃபோன் தேவைப்படும்.
  • உங்கள் WhatsApp Settings-க்கு சென்று உங்கள் பெயருக்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்து, "Add account" என்பதைக் கிளிக் செய்யவும். இது வாட்ஸ் அப் செயலியில் இரண்டு தனித்தனி கணக்குகளை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கும்.
  • மேலும், இந்தக் கணக்குகள் ஒவ்வொன்றிற்கும் உங்கள் தனியுரிமை மற்றும் அறிவிப்பு போன்ற செட்டிங்கை தனிப்பயனாக்கும் திறன் உங்களுக்கு இருக்கும்.

பாஸ்வேர்டு இல்லாமலே வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்... இனிமே பாஸ்கீ தான் எல்லாமே!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை:

மேலும் தனது வலைப்பதிவு இடுகையில் பயனர்களை வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது. அந்த பதிவில், "நினைவூட்டலாக, அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப்பை மட்டுமே பயன்படுத்தவும், உங்கள் தொலைபேசியில் அதிக கணக்குகளைப் பெறுவதற்கான  போலி பதிப்புகளைப் பதிவிறக்க வேண்டாம். உங்கள் செய்திகள் பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் இருக்கும் அதிகாரப்பூர்வ வாட்ஸ் செயலியை பயன்படுத்துங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios