Twitter-க்குப் போட்டியாக வளர்ந்து வரும் மற்றொரு சமூக ஊடகம்! ஒரே வாரத்தில் 2.3 லட்சம் பயனர்கள் இணைந்தனர்!

Twitter-க்குப் போட்டியாக தற்போது மஸ்டடோன் (Mastodon) என்ற சமூக ஊடகம் வளர்ந்து வருகிறது, ஒரே வாரத்தில் சுமார் 2.3 லட்சம் புதிய பயனர்கள் மஸ்டடோன் தளத்தில் சேர்ந்துள்ளனர்.

Twitter users are switching to Mastodon: What is it, how to use it, and more in Tamil

எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சுமார் பாதி பணியாளர்களை வேலையை விட்டு தூக்கினார். பயனர்கள் ப்ளூ டிக் குறியீடு பெறுவதற்கும், குறிப்பிட்ட வீடியோக்களைப் பார்ப்பதற்கும் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். இதனால் பல பேர் எலான் மஸ்க் நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது டுவிட்டரில் இருந்த முக்கிய பயனர்கள் மஸ்டடோன் (Mastodon) என்ற சமூக ஊடகத்திற்கு மாறத்தொடங்கியுள்ளனர். குறிப்பாக டுவிட்டரில் ஏற்கெனவே பிரபலமாக இருந்தவர்கள், ஏற்கெனவே ப்ளூ டிக் குறியீடு வாங்கியவர்கள் Mastodon-க்கு மாறினர். இதனால், அவர்களைப் பின்தொடர்பவர்களும்  மஸ்டடோனுக்கு மாறத்தொடங்கியுள்ளனர். அவ்வாறு சுமார் 2.3 லட்சம் பேர் புதிதாக மஸ்டடோனில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னது இந்த மஸ்டடோன்?

மஸ்டடோன் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன ஒரு யானை இனமாகும். அதையே சமூக ஊடகத்தின் பெயராகவும், எமோஜியாகவும் வைக்கப்பட்டுள்ளது. யானையின் தலைப்பாகமும், அதன் துதிக்கையும் இருப்பது போல் மஸ்டடோன் லோகோ உள்ளது. இதுவும் கிட்டத்தட்ட டுவிட்டரை போன்ற செயல்படும் சமூக ஊடக தளமாகவும். 

Telegram Update: வேற லெவல்..! இத யாருமே எதிர்பார்க்கல.!!

கடந்த 2016 ஆம் ஆண்டு மஸ்டடோன் அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் டுவிட்டரை விட அதிக அம்சங்களையும், வசதிகளையும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. முகப்பு பக்கத்தில் பதிவுகள், ஹேஷ்டேக்குகள்,  செய்திகள் என மூன்று மெனுக்கள் உள்ளன. 

பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ற தலைப்புகளையும், செய்திகளையும் பெற்றிடும் வகையில் மஸ்டடோனை அமைத்துக் கொள்ளலாம். விக்கிபீடியாவில் இந்த சமூக ஊடகத்தை மென்பொருள் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இலவச மீடியா தளமாகும். 

இருப்பினும் டுவிட்டரைப் போலவே மஸ்டடோனிலும் நடத்தை விதிமுறைகள், சேவை விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள் உள்ளிட்ட சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்கள் கடைபிடிக்கப்படுகிறது. மற்ற சோஷியல் மீடியாக்களைப் போல இதிலும் உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள், செய்திகள் வரையில் பார்க்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios