ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
தனது டிவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக நாய் படத்தை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, டோஜ்காயின் கிரிப்டோகரன்சி குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.
டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை, தனது டிவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார். இதன்படி, ஏற்கனவே இருந்த நீல வண்ண குருவிக்குப் பதிலாக ட்விட்டரில் நாய் படம் இடம்பெற்றுள்ளது. ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அசல் ட்விட்டர் பறவை லோகோவின் பின்னால் உள்ள கிராஃபிக் டிசைனர், இந்த படத்திற்காக எவ்வளவு குறைவாக சம்பளம் வாங்கினார் என்று தெரியுமா ? ட்விட்டர் முதன்முதலில் மார்ச் 2006 இல் சான் பிரான்சிஸ்கோவில் உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜூலையில் சரியாகத் தொடங்கப்பட்டது.
சைமன் ஆக்ஸ்லி என்பவர் தான் அவர். இங்கிலாந்தின் தி போர்ன்மவுத் பூல் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரு பிரிட்டிஷ் ஃப்ரீலான்ஸ் கிராஃபிக் டிசைனர். ட்விட்டர் நிறுவனத்தின் இப்போதைய $38.86 பில்லியனாக இருந்தாலும், சைமன் ஆக்ஸ்லி தனது லோகோ டிசைனுக்காக சிறிய தொகை மட்டுமே பெற்றுள்ளார்.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இதுகுறித்து பேசிய சைமன் ஆக்ஸ்லி, “நான் iStockphoto.com இல் படங்களை அப்லோட் செய்திருந்தேன்” என்று கூறினார். ட்விட்டர் ஸ்டாக் போட்டோ இணையதளத்தில் இருந்து படத்தை வாங்கியபோது ஆக்ஸ்லிக்கு $15க்கும் குறைவான தொகையே வழங்கப்பட்டது, அதன்பின் அவரது வருவாய் $10க்கும் குறைவாக இருந்தது. வடிவமைப்பாளர் தனது வடிவமைப்பிற்காக ட்விட்டரால் கூட நினைவு கூறப்படவில்லை.
இருப்பினும், 'அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை' என்பதை அவர் எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஆக்ஸ்லி, "நிச்சயமாக ட்விட்டர் தளத்தில் குறிப்பிடுவது மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் அவர்கள் கட்டாயம் இல்லை. அவர்கள் படத்தைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க..ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் உபியில் கைது.. தீவிரவாத செயலா? பரபர பின்னணி
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா