மார்ச் 29-இல் புதிய டைகர் ஸ்போர்ட் 660 வெளியீடு - டிரையம்ப் அசத்தல் அறிவிப்பு

டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் ஸ்போர்ட் 660 வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Triumph Tiger Sport 660 to launch on March 29

டிரையம்ப் மோட்டர்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2022 டைகர் ஸ்போர்ட் 660 மாடலை மார்ச் 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்து டிரையம்ப் டைகர் சீரிசில் எண்ட்ரி லெவல் மாடலாக அறிமஉகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிரத்யேக தோற்றம் கொண்ட ஸ்போர்டி ஹால்ஃப்-ஃபேரிங்  மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட்கள், அதிநவீன TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோல், ABS உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

Triumph Tiger Sport 660 to launch on March 29

இந்த மோட்டார்சைக்கிளில் 17 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த பைக் லுசென் புளூ மற்றும் சஃபையர் பிளாக், கோரோசி ரெட் மற்றும் கிராஃபைட், மினிமலிஸ்ட் கிராஃபைட் மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. அனைத்து நிறங்களும் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இதில் அட்ஜஸ்ட் செய்ய முடியாத 41mm யு.எஸ்.டி. ஃபோர்க், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் ணற்றும் ரிமோட் பிரீ-லோட் அட்ஜஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடலில் 660சிசி, 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 81 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஆப்ஷனல் அப்/டவுன் குயிக்‌ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.

Triumph Tiger Sport 660 to launch on March 29

அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய டிரையம்ப்  டைகர் ஸ்போர்ட் 660 மாடல் இந்திய சந்தையில் கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் சுசுகி வி ஸ்டாம் 650 XT போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios