10 நிமிட சார்ஜில் 181 கி.மீ. ரேன்ஜ்... அதிரடியான எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ.!

பெட்ரோல் என்ஜின் கொண்ட sDrive18i மாடலில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மூன்று சிலிண்டர்கள் கொண்ட யூனிட் உள்ளது.

 

Third Gen BMW X1 All Electric iX1 Revealed

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான பி.எம்.டபிள்.யூ. ஏற்கனவே அறிவித்தப்படி மூன்றாம் தலைமுறை X1 எஸ்.யு.வலி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. வழக்கமான ICE மற்றும் ஹைப்ரிட் மாடல்களுடன்  iX1 எலெக்ட்ரிக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

என்ஜின் விவரங்கள்:

2022 பி.எம்.டபிள்.யூ. X1 மாடல் இரண்டு விதமான பெட்ரோல், இரண்டு வித டீசல் என்ஜின், ஒற்றை ஆல் எலெக்ட்ரிக் iX1 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் பிளக் இன் ஹைப்ரிட் மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் என்ஜின் கொண்ட sDrive18i மாடலில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மூன்று சிலிண்டர்கள் கொண்ட யூனிட் உள்ளது. இது 134 பி.ஹெச்.பி. பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

Third Gen BMW X1 All Electric iX1 Revealed

உயர் ரக XDrive 23i வெர்ஷனில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் செட்டப் கூடுதலாக 18.7 ஹெச்.பி. பவர், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டி விடும். 

டீசல் வெர்ஷன் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் வெவ்வேறு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. sDrive 18d மாடலில், 147.5 பி.ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் xDrive23d மாடல் 194.4 பி.ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

இத்துடன் வழங்கப்பட்டு இருக்கும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 18.7 ஹெச்.பி. பவர், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.4 நொடிகளில் எட்டி விடும். 

Third Gen BMW X1 All Electric iX1 Revealed

எலெக்ட்ரிக் வேரியண்ட்:

பி.எம்.டபிள்யூ. iX1 மாடல் XDrive 30 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் செட்டப் கொண்டுள்ளது. இந்த கார் 308 பி.ஹெச்.பி. பவர், 494 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டி விடும்.  மேலும் இந்த கார் மணிக்கு 183 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

புதிய எலெக்ட்ரிக் பி.எம்.டபிள்.யூ. iX1 மாடலில் 64.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 438 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 11கிலோவாட் AC சார்ஜிங் மற்றும் 22 கிலோவாட் AC சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இதில் 22 கிலோவாட் AC சார்ஜிங் ஆப்ஷனல் பேக்கேஜ் வடிவில் வழங்கப்படுகிறது. இதன் 11 கிலோவாட் AC சார்ஜிங் கொண்டு காரை முழுமையாக சார்ஜ் செய்ய 6.5 மணி நேரங்கள் ஆகும். 22 கிலோவாட் சார்ஜர் பயன்படுத்தும் போது காரை 3.45 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். 

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி:

பி.எம்.டபிள்.யூ. iX1 மாடலில் ஃபாஸ்ட் DC சார்ஜிங் வசதி உள்ளது. இது அதிகபட்சம் 135 கிலோவாட்  சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இதை கொண்டு காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 29 நிமிடங்களே ஆகும். மேலும் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்குகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios