Telegram CEO-வை கைது செய்த போலீஸ்.. ரஷ்யா-உக்ரைன் போர் சர்ச்சை.. குறுக்கே வந்த பாவெல் துரோவ்!
டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் சனிக்கிழமை பாரிஸில் கைது செய்யப்பட்டார். மதிப்பீட்டாளர்கள் இல்லாதது குறித்து பிரெஞ்சு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். டெலிகிராம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
டெலிகிராம் செயலி தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெலிகிராமின் மதிப்பீட்டாளர்கள் இல்லாதது குறித்து பிரெஞ்சு போலீசார் தங்கள் விசாரணையை மையப்படுத்தியுள்ளனர். மதிப்பீட்டாளர்கள் இல்லாததால், மெசேஜிங் செயலியில் குற்றச் செயல்கள் தடையின்றி தொடர வாய்ப்புள்ளதாக காவல்துறை கூறுகிறது. டெலிகிராம் செயலிக்கு அறிமுகமே தேவையில்லை. உலக அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முன்னணி சோசியல் மீடியா ஆப் ஆகும். வாட்ஸ்அப்-க்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக டெலிகிராம் இருக்கிறது.
நேற்று டெலிகிராம் மெசேஜிங் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை உலக அளவில் உண்டாக்கி உள்ளது. சனிக்கிழமை மாலை பாரிஸின் போர்ஜஸ் விமான நிலையத்தில் பவல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தனியார் ஜெட் விமானத்தில் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் பாவெல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. டெலிகிராம் செயலி தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. டெலிகிராமின் மதிப்பீட்டாளர்கள் இல்லாதது குறித்து பிரெஞ்சு போலீசார் தங்கள் விசாரணையை மையப்படுத்தியுள்ளனர் என்று கூறுகின்றனர்.
ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?
மதிப்பீட்டாளர்கள் இல்லாததால் மெசேஜிங் செயலியில் குற்றச் செயல்கள் தடையின்றி தொடர வாய்ப்புள்ளதாக காவல்துறை கூறுகிறது. பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து பிரான்சுக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இது குறித்து டெலிகிராம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், இது குறித்து போலீசார் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து, போரைச் சுற்றியுள்ள அரசியல் தொடர்பாக டெலிகிராமில் பெரிய அளவிலான தகவல் பரிமாற்றங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறுகையில், டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலி தனது அதிகாரிகளுக்கு தகவல்தொடர்புக்கான மிக முக்கியமான வழிமுறையாகும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரெம்ளினும், ரஷ்ய அரசாங்கமும் செய்திகளைப் பகிர டெலிகிராமை அதிகளவில் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ரஷ்யப் போர் பற்றிய தகவல்கள் டெலிகிராமில் பரவலாகக் கிடைத்தன என்றும் அந்தந்த நாட்டை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். துபாயில் செயல்படும் டெலிகிராம் செயலி, ரஷ்யாவைச் சேர்ந்த துரோவ் என்பவரால் நிறுவப்பட்டது. அரசாங்கத்தின் சில கோரிக்கைகளை ஏற்க மறுத்து 2014-க்குப் பிறகு துரோவ் ரஷ்யாவை விட்டு வெளியேறினார். தற்போது டெலிகிராம் செயலி ஆனது ரஷ்யா, உக்ரைன் மற்றும் சோவியத் நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று டெக் துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!