பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட் டார்கெட் செய்யும் ஹோனர்! பக்கா கேமராவுடன் புது மொபைல்கள் அறிமுகம்!
Honor 200 மற்றும் Honor 200 Pro இரண்டும் தனித்துவமான கேமராவுடன் இருக்கின்றன. 50MP Sony IMX906 முதன்மை சென்சார், 50MP சோனி IMX856 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கிய கேமரா அமைப்பு உள்ளது.
ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ என்ற இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை 20 முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
Honor 200 மொபைல் 6.7-இன்ச் குவாட் 120Hz AMOLED டச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. Honor 200 Pro சற்று பெரிய 6.78-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ப்ரோ மாடல் மொபைலின் டிஸ்பிளே பிரகாசமும் தரமும் சற்று அதிகமாக இருக்கிறது.
Honor 200 ஸ்மார்ட்போன் Snapdragon 7 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Honor Pro மொபைல் Snapdragon 8s Gen 3 உடன் மேம்படுத்தப்பட்ட ஹானர் C1+ சிப்செட்டைக் கொண்டிருக்கிறது. இரண்டுமே ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MagicOS 8.0 இல் இயங்குகின்றன.
அம்பானி வீட்டு புல்லட் புரூஃப் கார்... டிரைவர் சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்!
Honor 200 மற்றும் Honor 200 Pro இரண்டும் தனித்துவமான கேமராவுடன் இருக்கின்றன. 50MP Sony IMX906 முதன்மை சென்சார், 50MP சோனி IMX856 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கிய கேமரா அமைப்பு உள்ளது.
Honor 200 மொபைலில் 50MP செல்ஃபி கேமரா உள்ளது. ஆனால் Honor 200 Pro மொபைலில் 50MP + 2MP டபுள் செல்ஃபி கேமரா இருக்கிறது. இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் சில போன்களில் மட்டுமே டபுள் செல்ஃபி கேமரா இருக்கிறது. இரண்டு போன்களும் 100W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,200mAh பேட்டரியைக் கொண்டவை. இயக்கப்படுகிறது. ப்ரோ மாடலில் மட்டும் 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
8GB RAM மற்றும் 256GB மெமரியுடன் வரும் ஹானர் 200 மொபைலின் பேசிக் வேரியண்ட் ரூ.34,999 விலையில் கிடைக்கிறது. அதேசமயம் 12GB RAM மற்றும் 512GB மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999க்குக் கிடைக்கும். ஹானர் 200 ப்ரோ 12GB RAM மற்றும் 512GB மெமரியுடன் மட்டுமே கிடைக்கும். இதன் விலை ரூ.57,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு போன்களும் ஜூலை 20 முதல் ஹானர் இணையதளம் மற்றும் அமேசான் மூலம் விற்பனைக்கு வரும். அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ மொபைல்களுக்கு முறையே ரூ.1,000 மற்றும் ரூ.8,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஹோனர் ரூ.2,000 அல்லது ரூ.3,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.