அம்பானி வீட்டு புல்லட் புரூஃப் கார்... டிரைவர் சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்!
அம்பானி குடும்பத்திற்கு ஓட்டுனராக இருப்பது எளிதான வேலை அல்ல. அம்பானி வீட்டு ஓட்டுநர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்கள். அதற்காக கடுமையான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார் உலகின் 11வது பணக்காரராகவும் இருக்கிறார். 122 பில்லியன் டாலர் சொத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.
இருந்தாலும், முகேஷ் அம்பானி ரொம்ப காலமாக தனது சம்பளத்தை உயர்த்தவே இல்லை. தனது நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக வருடத்துக்கு 15 கோடி ரூபாய் தான் சம்பளமாகப் பெற்று வருகிறார். 2008-2009 நிதியாண்டுக்கு முன் ஆண்டுக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்தார்.
முகேஷ் அம்பானி தனது சொந்த சம்பளத்தைக் குறைத்துக்கொண்டாலும் தனது ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறார். 2017ஆம் ஆண்டில், சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ, முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட காரை இயக்கும் ஓட்டுநர் ஒரு மாதத்துக்கு ரூ. 2 லட்சம் சம்பாதிக்கிறார் என்று கூறியது. அதாவது ஆண்டு சம்பளம் குறைந்தது ரூ.24 லட்சம். இந்தச் சம்பளம் 2023ஆம் ஆண்டின் நிலவரம். அப்போதே அம்பானியின் டிரைவர் வாங்கும் சம்பளம் நெட்டிசன்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்! வருமான வரியை சேமிக்க முத்தான வழிகள்!
ஆனால், அம்பானி குடும்பத்திற்கு ஓட்டுனராக இருப்பது எளிதான வேலை அல்ல. அம்பானி வீட்டு ஓட்டுநர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்கள். அதற்காக கடுமையான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. அந்த டிரைவர்கள் வணிக வாகனங்கள், சொகுசு வாகனங்கள் இரண்டையும் இயக்குவதில் வல்லுநர்களாக இருக்கிறார்கள்.
சவாலான சாலைகளில் பயணிக்கும்போது லாகவமாக வாகனத்தை இயக்கும் திறமை கொண்டவர்களாக உள்ளனர். அம்பானி குடும்பத்தினர் பயணிக்கும் கார்களில் பலத்த பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அம்பானியின் வாகனங்கள் எல்லாமே குண்டு துளைக்காதவை. அவை மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
அம்பானி குடும்பத்திற்கு ஓட்டுநர்களை நியமிக்கும் ஏஜென்சி எது என்று அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. டிரைவர்களைப் போலவே முகேஷ் அம்பானி வீட்டுச் சமையல்காரர்கள், காவல் ஆட்கள் முதல் வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் வரை அனைத்து ஊழியர்களும் தாராளமான சம்பளம் மற்றும் பலவிதமான பலன்களைப் பெறுகிறார்கள்.
சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்! தல தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்!