டாடா நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் - எதை வாங்கலாம்.. இது தான் வித்தியாசமா?

நெக்சான் EV மாடல் ஸ்டாண்டர்டு வெர்ஷன் விற்பனையில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

Tata Nexon EV vs Tata Nexon EV Max What's Different

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் இந்திய சந்தையில் அமோக விற்பனையை பதிவு செய்து வருகிறது. அமோக வரவேற்பு காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடலின் புது வேரியண்ட் நெக்சான் EV மேக்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முந்தைய நெக்சான் EV மாடல் ஸ்டாண்டர்டு வெர்ஷன் விற்பனையில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இது நெக்சான் EV ஸ்டாண்டர்டு மாடலின் மேல் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் புது மாடலில் மேக்ஸ் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் செண்டர் கன்சோல் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக சுழலும் வகையிலான நாப் வழங்கப்பட்டு உள்ளது. 

டாடா நெக்சான் EV மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்கள் இடையே வித்தியாசமாக உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது நெக்சான் EV ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் அளவில் பெரியது ஆகும். நெக்சான் EV ஸ்டாண்டர்டு மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tata Nexon EV vs Tata Nexon EV Max What's Different

பவர் அவுட்புட்:

நெக்சான் EV மேக்ஸ் மாடல் 141 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. நெக்சான் EV ஸ்டாண்டர்டு மாடல் 127 ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. 

செயல்திறன்:

புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட 100 கிலோ எடை அதிகம் ஆகும். இதில் 70 கிலோ அதிக திறன் கொண்ட பெரிய பேட்டரியில் இருந்து வருகிறது. எனினும், இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். டாடா நெக்சான் EV ஸ்டாண்டர்டு மாடல் இதே வேகத்தை எட்ட 9.9 நொடிகளை எடுத்துக் கொள்கிறது.

ரேன்ஜ்:

நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. இது வழக்கமான பரிசோதனை சூழ்நிலைகளில் கணக்கிடப்பட்ட ரேன்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. நெக்சான் EV ஸ்டாண்டர்டு மாடல் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என ARAI சான்று பெற்று இருக்கிறது.

சார்ஜிங் நேரம்:

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 3.3 கிலோவாட் சார்ஜர் அல்லது 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜரை வீடு அல்லது அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதை கொண்டு காரை முழுமையாக சார்ஜ் செய்ய 6.5 மணி நேரம் ஆகும். 50 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு நெக்சான் EV மாடலை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 56 நிமிடங்கள் ஆகும். 

Tata Nexon EV vs Tata Nexon EV Max What's Different

நெக்சான் EV ஸ்டாண்டர்டு மாடலில் 3.3 கிலோவாட் ஆன்போர்டு சார்ஜர் வழங்கப்படுகிறது. இதனை கொண்டு காரை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும். இத்துடன் வழங்கப்பட்டு இருக்கும் 25 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு காரை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும்.

அம்சங்கள்:

நெக்சான் EV மேக்ஸ் மாடலில் பல்வேறு புது அம்சங்கள்- ஜூவல் நாப் மற்றும் ஆக்டிவ் மோட் டிஸ்ப்ளே, புதிய மக்கரனா பெய்க் இண்டீரியர், முன்புறம் வெண்டிலேடட் லெதர் இருக்கைகள், ஏர் பியூரிபையர், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது

விலை:

புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் விலை ரூ. 17 லட்சத்து 74 லட்சம் என துவங்கி அதிகபட்சமாக ரூ. 19 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செயயப்பட்டு உள்ளது. நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 54 ஆயிரம்  என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios