இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் 'திடீர்' முடக்கம்..! பொதுமக்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா ?
சமூக ஊடகங்களான .இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்,யூடியூப், பேஸ்புக்,ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடி :
இலங்கையில் கடந்த 2 வருடமாக சரிந்து வந்த பொருளாதாரம் அங்கு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. முக்கியமாக அந்நிய செலாவணிக்கான டாலர் கையிருப்பு இலங்கையில் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டு இருக்கிறது. கையில் காசு இருந்தாலும், வாங்க பொருட்கள் இல்லாத அளவிற்கு பண வீக்கம் அதிகரித்து உள்ளது.
இலங்கையில் 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 297.99 ஆக உயர்ந்து உள்ளது. இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 260 ரூபாய் வரை தொட்டுள்ளது. டீசல் விலை 210 ரூபாய் வரை தொட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அங்கு மின்தடை 13 மணி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பல நிறுத்தப்பட்டுள்ளன.
அதிபருக்கு எதிராக போராட்டம் :
கடந்த 31-ம் தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசி மக்களை விரட்டியடித்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார்.
சமூக வலைத்தளங்கள் முடக்கம் :
இந்நிலையில், தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது. சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.