Twitter Logo : நாய்க்கு பதில் மீண்டும் பறக்கும் குருவி! பழசுக்கு மாறிய ட்விட்டர் லோகோ!
ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் லோகோ மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. நாய் முகமாக இருந்த லோகோ மீண்டும் பழைய குருவி லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. எலன் மஸ்க்கின் இந்த செயல் பலதரப்பு பயனர்களை கடுப்படையச் செய்துள்ளது.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் லோகோ மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. நாய் முகமாக இருந்த லோகோ மீண்டும் பழைய குருவி லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. எலன் மஸ்க்கின் இந்த செயல் பலதரப்பு பயனர்களை கடுப்படையச் செய்துள்ளது.
உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ட்விட்டர் உள்ளது. டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கினார். அதைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டரை வாங்கியவுடன் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் நீல நிற அங்கீகாரம் பெற பணம் செலுத்த வேண்டும் என கூறினார். அடுத்ததாக நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசு அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என பல்வேறு யுக்தியை அறிமுகம் செய்தார். மேலும், நிறுவனத்தை சீர்படுத்துவதாகக்கூறி ஆள்குறைப்பு நடவடிக்கைகளிலும் இறங்கி விமர்சனங்களை சந்தித்தார்.
ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
இதனிடையே, டோஜ்காயின் கிரிப்டோகரன்சி குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்தார். டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை, தனது டிவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றானர். இதன்படி, ஏற்கனவே இருந்த நீல வண்ண குருவிக்குப் பதிலாக ட்விட்டரில் நாய் படம் இடம்பெற்றது. ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ட்விட்டர் லோகோ மீண்டும் பழசுக்கு மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் நாய்க்கு பதிலாக குருவி பறக்கவிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க் என்னதான் நினைக்கிறார் என இணையதளவாசிகள் அதிருப்பதியடைந்துள்ளனர்.