ரூ.500 க்கு ஸ்மார்ட் போன்..! அதுமட்டுமல்ல மாதம் ரூ.60 -கே "ப்ரீ கால்ஸ்"..!
ஜியோ வந்தவுடன்,மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் ப்ரீ கால்ஸ், டேட்டா எல்லாமே குறைந்த விலையில் வழங்கியது...
இந்நிலையில், ஜியோவிற்கு போட்டியாக தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ள புது யுக்தியை கையாள திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி ரூ.500 விலையில் புதிய 4G ஸ்மார்ட்போன் வெளிவிட மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.
பாரதி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரூ.60-70 விலையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவை வழங்கும் மாதாந்திர திட்டமும் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம்,வாடிக்கையாளர்கள் ஃபீச்சர் போன் வாங்குவதை விட, மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களை வாங்க தொடங்குவார்கள்.
மேலும், நடுத்தர மக்கள் கூட, ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் அற்புத வாய்ப்பை பெறுவார். அதிலும் கூட மாதாந்திர தொப்கையாக ரூ.70 கு கிடைக்கும் தருவாயில் உண்மையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.