Asianet News TamilAsianet News Tamil

ஆதார் பயன்படுத்தும் போது இதை மட்டும் செய்யாதீங்க...!

வங்கியில் கடன் வாங்கும் போது கே.வை.சி. எனப்படும் வாடிக்கையாளர்களை சரிபார்க்கும் வழிமுறையில் ஆதார் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
security tips you should follow while using your Aadhaar card
Author
India, First Published Jun 2, 2022, 5:08 PM IST
நம் நாட்டில் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அனைவருக்கும் அதார் கார்டு அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. ஆதார் கார்டு பல்வேறு சேவைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆதார் மூலம் அரசின் நலத் திட்டங்களில் பயன்பெற முடியும். இது மட்டும் இன்றி ஆதார் இல்லாமல் கடன் வாங்குவதும் சிரமமான காரியம் ஆகி விட்டது. 

வங்கியில் கடன் வாங்கும் போது கே.வை.சி. எனப்படும் வாடிக்கையாளர்களை சரிபார்க்கும் வழிமுறையில் ஆதார் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ஆதார் கார்டு பணம் சம்மந்தப்பட்ட பல்வேறு சேவைகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்த ஆதார் கார்டை நம்மில் பலரும் மிக எளிதாக எடுத்துக் கொள்கிறோம். ஆதார் கார்டை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?

உங்கள் ஆதார் கார்டு-ஐ அதிகாரப்பூர்வ UIDAI வலைதளத்தில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும். பொது இடங்களில் உள்ள கணினியில் ஆதார் கார்டு டவுன்லோட் செய்தால், அதனை அழித்து விட மறக்க வேண்டாம். 

ஆதார் PVCCard பெறுவது எப்படி?

ஆன்லைனில் ஆதார் PVCCard பெற விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://myaadhaar.uidai.gov.in/genricPVC - எனும் இணைய முகவரிக்கு சென்று உங்களின் SRN மற்றும் AWB நம்பர் கொண்டு எஸ்.எம்.எஸ். ஆக பெற்றுக் கொள்ள முடியும். இதை எந்த மொபைல் நம்பர் கொண்டும் ஆர்டர் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வருமான வரி:

உங்களின் வருமான வரி தாக்கலை உறுதிப்படுத்தும் போது ஆதார் கார்ட் பயன்படுத்தலாம். இதற்கு உங்களின் ஆதார் கார்ட் பேன் (PAN) எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். மேலும் உங்களின் ஆதார் கார்ட் மற்றும் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும். 

ஒருமுறை கடவுச்சொல்:

ஆதார் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது எம் ஆதார் செயலி கொண்டு தொலைந்து போன ஆதார் UID/EID உள்ளிட்டவைகளை OTP மூலம் மீட்க முடியும். இதுபற்றிய அப்டேட்களை பெற ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். 

ஆதார் ஹிஸ்ட்ரி:

ஆதார் ஆத்தெண்டிகேஷன் ஹிஸ்ட்ரியை சரிபார்க்க ஆதார் வலைதளத்தை பயன்படுத்த முடியும். இதில் அதிகபட்சம் 50 ஆத்தெண்டிகேஷன்களை கடந்த ஆறு மாதங்கள் வரை பெற முடியும். 
Follow Us:
Download App:
  • android
  • ios