Asianet News TamilAsianet News Tamil

Fastag பேலன்சை வெறும் SMS மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்! எப்படி?? இப்படி..!

நாடு முழுவதும் பாஸ்டேக் சேவை அமலில் உள்ள நிலையில் பாஸ்டேக்கில் நமது கணக்கில் உள்ள பணத்தை எஸ்எம்எஸ் மூலம் அறிந்துகொள்ளும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
 

SBI users can now check FASTag balance by sending a message
Author
First Published Sep 13, 2022, 10:06 AM IST

கடந்த வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மிகவும் முக்கியமான திட்டங்களில் ஒன்று தான் தங்க நாற்கர சாலை. தென்கோடி முனையான கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை ஒரே நேரத்தில் 4 வாகனங்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைக்கு ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சாலையை பயன்படுத்துவதற்கான தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

பணம் வசூலிக்கும் முறை தற்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாஸ்டேக் மூலம் பணம் பெறப்படுகிறது. ஃபாஸ்டேக் அறிமுகத்திற்கு முன்னர் சுங்கச்சாவடிகளில் ஒருமணி நேரத்திற்கு சராசரியாக 112 வாகனங்கள் கடந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார்  260 வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்கின்றன. அந்த அளவிற்கு பாஸ்டேக் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

ஆனால் நாம் நாற்கர சாலையை பயன்படுத்தும் போது நமது பாஸ்டேக் கணக்கில் எப்பொழுதும் பணம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தொகையை இரண்டு மடங்காக செலுத்த நேரிடலாம். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஃபாஸ்டேக்கில் பணம் இருப்பு உள்ளதை எஸ்எம்எஸ் மூலம் கண்டறியும் வசதியை எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ளது.

Spam இமெயில் தொல்லை தாங்க முடியவில்லையா? இப்படி செய்தால் போதும்!
 

அதன்படி பாஸ்டேக் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து 7208820019 என்ற எண்ணிற்கு "FTBAL" என எஸ்எம்எஸ் அனுப்பினால் உங்கள் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று உங்கள் எண்ணிற்கு பதில் வரும்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios